PUBLISHED ON : ஆக 29, 2016

வீட்டில் இருக்கும் புத்தகங்களில், முழுமையாகப் படித்துமுடித்துவிட்டு, 'இனி யாருக்கும் பயன்படாது, எடைக்குத்தான் போட வேண்டும்' என்று நீங்கள் நினைக்கும் புத்தகங்கள் இருந்தால், அவற்றைக் கொண்டு குத்தாத முள்ளம்பன்றி உருவம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1. கருப்பு வெள்ளை அச்சுகள் மட்டும் இருக்கும் பழைய புத்தகம் ஒன்று.
2. கருப்பு நிற, சிவப்பு நிற சார்ட் அட்டைகள்.
3. பசை,
4. அலங்கார பொட்டுகள்,
5. கத்தரிக்கோல்.
* புத்தகத்தில் இருக்கும் தாள்களை, படத்தில் காட்டியுள்ளபடி மடிக்க வேண்டும்.
* அனைத்து தாள்களையும் மடித்த பிறகு, கற்றையின் இரு புறமும் இருக்கும் அட்டைகளை, படத்தில் காட்டியுள்ள வடிவத்தில் வெட்ட வேண்டும்.
* கருப்பு நிற சார்ட்டில், மூக்கு மற்றும் கண்களுக்கான வட்டங்களை வெட்டி, கற்றையின் கூர் முனையில் பொருத்திவிட வேண்டும். கண்களுக்கு உரிய வட்டங்களில் ஒட்டும் பொட்டுகளைப் பொருத்த வேண்டும்.
* சிவப்பு நிற சார்ட்டில், சற்று நீளமான பட்டியை வெட்டிக் கொண்டு, உடலைச் சுற்றி ரிப்பன் மாதிரி பொருத்திவிட வேண்டும்.
* மேலும் மூன்று சிறிய அளவிலான பட்டிகளை வெட்டி, படத்தில் காட்டியுள்ளபடி அடுக்கிக்கொள்ளுங்கள். மத்தியில் பசை தடவி, பட்டையின் மேலே பூ டிசைன் வருமாறு ஒட்ட வேண்டும்.
குத்தாத, சாதுவான அழகிய முள்ளம்பன்றியை உங்களது ரூம்மேட் ஆக்கிவிடுங்கள்!
- ஓவியா டீச்சர்
