PUBLISHED ON : டிச 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழமொழிகளில் சில எழுத்துகள் விடுபட்டுள்ளன. காலி இடங்களில் எழுத்தை நிரப்பினால் வார்த்தை கிடைக்கும்.குறிப்பு: ஒரு பழமொழியில் இரண்டு காலி இடங்களிலும் ஒரே எழுத்தைத்தான் பயன்படுத்தணும்.
1. ஆ _ ப்பட்டம் தே _ விதை
2. நூ _ ப் போல சே _
3. அ _ த்தின் அழகு மு _ த்தில்
4. இக்க _ க்கு அக்க _ பச்சை
5. அ _ னமிட்டவர் வீட்டில் க _ னமிடலாமா?
விடைகள்:
1. ஆடிப்பட்டம் தேடிவிதை
2. நூலைப் போல சேலை
3. அகத்தின் அழகு முகத்தில்
4. இக்கரைக்கு அக்கரை பச்சை
5. அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடலாமா?