
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. மஹாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவு, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், எத்தனை இடங்களைக் கைப்பற்றி, பாரதிய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது?
அ. 250
ஆ. 264
இ. 220
ஈ. 234
2. ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் உள்ள மேவார் அரச குடும்பத்தின் புதிய மன்னராக சமீபத்தில் பதவியேற்ற விஸ்வராஜ் சிங், எந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார்?
அ. காங்கிரஸ்
ஆ. பாரதிய ஜனதா
இ. கம்யூனிஸ்ட்
ஈ. ஜனதா தளம்
3. காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, எந்த லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், 4.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்று, முதன்முறையாக எம்.பி.யாகி உள்ளார்?
அ. வயநாடு
ஆ. ராய்ப்பூர்
இ. சூரத்
ஈ. வதோதரா
4. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு, வேலை வழங்க மறுத்த எந்த மாநில அரசை, உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது?
அ. ஹிமாச்சல பிரதேசம்
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. மத்திய பிரதேசம்
ஈ. அருணாச்சல பிரதேசம்
5. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக, நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ளவர்?
அ. ஏக்நாத் ஷிண்டே
ஆ. ஹேமந்த் சோரன்
இ. ஹிமந்த பிஸ்வா சர்மா
ஈ. பாசன்ட் சோரன்
6. சென்னை -- அந்தமான் விமான சேவையை, வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து, எந்த விமான நிறுவனம் புதிதாகத் தொடங்க உள்ளது?
அ. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஆ. ஏர் இந்தியா
இ. இண்டிகோ
ஈ. ஸ்பைஸ் ஜெட்
7. ஐ.சி.சி. டெஸ்ட் பெளலர் தரவரிசையில், மீண்டும் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீரர்?
அ. ஹார்த்திக் பாண்ட்யா
ஆ. சூர்யகுமார் யாதவ்
இ. ஜஸ்பிரிட் பும்ரா
ஈ. ரவிச்சந்திரன் அஷ்வின்
8. இந்தூரில் நடந்த, சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடரில், 'டி-20' அரங்கில், 28 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ள குஜராத் அணி வீரர்?
அ. சிராஜ் காந்தி
ஆ. உர்வில் படேல்
இ. ராகேஷ் படேல்
ஈ. சத்யஜித் பராப்
விடைகள்: 1. ஈ, 2. ஆ, 3. அ, 4. அ, 5. ஆ, 6. அ, 7. இ. 8. ஆ,