தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இன்றைய புதிர்

இன்றைய புதிர்

இன்றைய புதிர்


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

1,000 பக்கங்கள் உள்ள ஒரு மர்ம நாவலை, மிகவும் ஆவலோடு படித்துக் கொண்டிருந்தேன்!

வேகமாக ஓடி வந்த என் கடைக்குட்டி, 'இந்த அப்பாவுக்கு வேறு வேலையே இல்லை! எப்போ பாத்தாலும் கம்ப்யூட்டரு! இல்லன்னா கதை புக்கு!' என்று சொல்லி, புத்தகத்தைப் பிடித்து இழுத்தாள். பழைய புத்தகம் என்பதால், ஒன்பது பக்கங்கள் கிழிந்துவிட்டன. கிழிந்த தாள்களின் பக்க எண்களைக் கூட்டத் தொடங்கினேன். கூட்டுத் தொகை 1000 வருமா?

விடை:

வராது. புத்தகத்தின் பக்க எண்களைப் பொறுத்த வரை, ஒரு தாளின் இரண்டு பக்கங்களில், ஒன்றில் ஒற்றை எண்ணும், மற்றதில் இரட்டை எண்ணும் இருக்கும். அவற்றைக் கூட்டினால் கண்டிப்பாக ஒற்றை எண்தான் வரும். எனவே, ஒன்பது தாள்களின் பக்க எண்களைக் கூட்டும்போதும் ஒற்றை எண்தான் வரும். இரட்டைப்படை எண்ணான 1,000 வராதுதானே.

கு. சீனுவாசன்,

பட்டதாரி ஆசிரியர், ஊ.ஒ.ந.பள்ளி, சாலைஅகரம், விழுப்புரம் மாவட்டம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us