தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தள தள தக தக தக்காளி

தள தள தக தக தக்காளி

தள தள தக தக தக்காளி


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

நம் அன்றாட சமையலில் காயாகவும் கனியாகவும் பயன்படும் தக்காளி, காய்கறிச் செடி இனத்தைச் சேர்ந்தது. 'டொமேட்டோ' (Tomato) என்ற ஆங்கிலச் சொல், டொமாட்ல் (Tomatl) என்ற நஃகுவாட்டில் (Nahuatl) என்ற மொழியில் இருந்து உருவானது.

வைட்டமின் சி 34%

வைட்டமின் எச் (பயோடின் - Biotin) 24%

வைட்டமின் கே 16%

தாமிரம் (காப்பர் - - Copper) 12%

நார்ச்சத்து (ஃபைபர் - Fiber) 9%

தக்காளிச் செடி 1 - 3 அடி உயரம் வரை வளரும்

லைகோபீன் (Lycopene) தக்காளியில் மிக அதிகம் உள்ள சத்து இது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.

உயிரியல் வகைப்பாடு

தாயகம் : தென் அமெரிக்கா

திணை : தாவரம்

பிரிவு : பூக்கும் தாவரம்

வகுப்பு : மக்னோலியோப்சிடா (Magnoliopsida)

வரிசை : சோலானேல்ஸ் (Solanales)

குடும்பம் : சோலானேசியே (Solanaceae)

பேரினம் : சோலானம் (Solanum)

இனம் : எஸ் லைகோபெர்சிகம் (S.Lycopersicum)

அறிவியல் பெயர் : சோலானம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum)

தக்காளி உற்பத்தியில்...

முதல் இடம் சீனா

இரண்டாம் இடம் அமெரிக்கா

மூன்றாம் இடம் இந்தியா

3.5 கிலோ உலகிலேயே அதிக எடையுள்ள தக்காளி அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா (Oklahoma) நகரில் 1986ல் விளைந்தது.

தக்காளி தவளை: ஆமாம்! 'தக்காளி தவளை' என்ற ஒன்று இருக்கிறது. இதன் அசல் பெயர் 'டைஸ்கோபஸ் கியுநெட்டி' (Dyscophus Guineti). ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் (Madagascar) போன்ற நீர் சூழ்ந்த காட்டுப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

தக்காளி திருவிழா: 'லா டொமாட்டினா' (La Tomatina) என்ற பெயரில் தக்காளி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயினில் கொண்டாடப்படுகிறது. ஒரு வார காலம் நடக்கும் இந்தத் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை எறிந்து விளையாடுவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us