தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தடதட... கடகட... ரயில் வண்டி

தடதட... கடகட... ரயில் வண்டி

தடதட... கடகட... ரயில் வண்டி


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் பெரிய ரயில் தட கட்டமைப்பு: அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்திய ரயில்வே உலகிலேயே 4ஆவது பெரிய ரயில் தட கட்டமைப்பைப் பெற்றிருக்கிறது.

7,083 - ரயில் நிலையங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.

500 கோடி - இந்திய ரயில்வேயில் ஓர் ஆண்டில் பயணம் செய்வோர் எண்ணிக்கை

இந்திய ரயில்வே செயல்படும் பகுதிகள்:

27 மாநிலங்கள்

3 யூனியன் பிரதேசங்கள்.

சிக்கிம் மட்டுமே இந்திய ரயில் வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை.

1895 - இந்தியா ரயில் என்ஜின்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது.

1896 - உகாண்டா ரயில் தடத்தைத் தொடங்க, இந்தியப் பொறியாளர்களையும் ரயில் என்ஜின்களையும் அனுப்பியது.

63,140 கி.மீ. - இந்தியாவில் உள்ள ரயில் பாதையின் மொத்த நீளம்

19,000 - தினசரி இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை

12,000 - பயணிகள் போக்குவரத்து ரயில்கள்

14,000+ தினமும் இயக்கப்படும் மின் தொடர்வண்டிகள் எண்ணிக்கை

7,000 - சரக்குப் போக்குவரத்து ரயில்கள்

35 கோடி டன் - ஓர் ஆண்டில் நடைபெறும் சரக்குப் போக்குவரத்து

70% வருமானம் - சரக்குப் போக்குவரத்தின் மூலமே கிடைக்கிறது.

16 லட்சம் - ரயில்வே பணியாளர்கள் எண்ணிக்கை

மிக நீளமான நடைமேடை (Platform): 1.35 கிலோ மீட்டர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது.

அதிக இடத்தில் நின்று செல்லும் ரயில்: எக்ஸ்பிரஸ் - மெயில் வகையில், அதிக இடத்தில் நின்று செல்லும் ரயில் ஹவுரா - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் 115 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது

மிக நீளமான ரயில் நிலையப் பெயர்: அரக்கோணம் ரேணிகுண்டா இடையே உள்ள 'வெங்கட்டநரசிம்மராஜூவாரிபேட்டா'

மிகச்சிறிய ரயில் நிலைய பெயர்: இப் (IB), ஒடிஸாவில் உள்ளது.

இந்தியாவில் உள்ள இருப்புப் பாதைகள்

அகன்ற இருப்புப் பாதை (Broad Gauge 1.675 m) மீட்டர் அளவுப்பாதை (Meter Gauge 1.000m)

குறுகிய அளவுப்பாதை (Narrow Gauge 0.762.m & 0.610m)

* ஒரு பயணிகள் ரயில் பொதுவாக 18 பெட்டிகளைக் கொண்டிருக்கும். சில முக்கியமான புகழ்பெற்ற ரயில்கள் 24 பெட்டிகள் வரை கொண்டுள்ளன.

1853 ஏப்ரல் 14, முதல் பயணிகள் ரயில் மும்பை தானா இடையே இயக்கப்பட்டது.

34 கிலோ மீட்டர் - மும்பை தானா இடையே உள்ள தொலைவு

1853 ரயில் வண்டி இந்தியாவில் அறிமுகம்

1856 தமிழ்நாட்டின் முதல் இருப்புப் பாதை ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை

1925ஆம் ஆண்டு முதல் மின்சார ரயில் பிப்ரவரி 3ஆம் தேதி பாம்பே (விக்டோரியா டெர்மினல்) மற்றும் குர்லா ரயில் நிலையங்களுக்கு இடையில் மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரயில் மியூசியம் டெல்லி: 1977ஆம் ஆண்டு ரயில் அருங்காட்சியகம் 11 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. நீராவி என்ஜின், ரயில் பெட்டிகள், அரிய புகைப்படங்கள் என இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே தனித்தன்மை கொண்ட அருங்காட்சியகம்.

அதிவேக ரயில்: புது டெல்லி- போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் அதிவேகமான ரயில். பரீதாபாத்- ஆக்ரா தடத்தில் இந்த ரயில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

ஆமை வேக ரயில்: இந்தியாவின் மிக குறைவான வேகம் கொண்ட ரயில் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையில் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில்தான். மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.

மிக நீளமான தொலைவு பயணிக்கும் ரயில் : 'விவேக் எக்ஸ்பிரஸ்' திப்ரூகர் (அஸ்ஸாம் மாநிலம்) முதல் கன்னியாகுமரி வரை செல்கிறது. மொத்த கிலோ மீட்டர்கள் 4,273. அதிக நேரம் பயணிக்கும் ரயிலும் இதுதான்.

மிகக் குறைந்த தொலைவு பயணிக்கும் ரயில் : நாக்பூர் முதல் அஜ்னி வரை செல்கிறது. மொத்த கிலோ மீட்டர்கள் 3. அஜ்னியில்

உள்ள ரயில் பணிமனைக்குச் செல்லும் பணியாளர்களுக்காக இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

நீண்ட தூரம் செல்லும் இடை நில்லா ரயில்: திருவனந்தபுரம் நிஜாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரஸ் 528 கிலோ மீட்டர்கள் தொலைவை இடையில் எங்கும் நிற்காமல் கடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us