தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/த்ரிகோணாசனம்

த்ரிகோணாசனம்

த்ரிகோணாசனம்


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'த்ரி' என்றால், மூன்று என்று அர்த்தம். மூன்று கோணங்களைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருக்கும் இந்த ஆசனம்.

செய்முறை:

* நேராக நிமிர்ந்து கொண்டு, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

* வலது காலை அகட்டி 3 அல்லது 4 அடி அகலத்துக்கு தள்ளி வைத்துக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்தவாறே, கைகளை பக்கவாட்டில் உயர்த்தி தோள் வரை கொண்டு செல்லவும்.

* மூச்சை வெளிவிட்டுக்கொண்டே, மெதுவாக இடுப்பிலிருந்து வலது பக்கமாக பக்கவாட்டில் சரிந்து, வலது கை குதிகாலை தொடும்படி வைத்துக் கொள்ளவும்.

* இடது கை தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு இருக்கட்டும்.

* மேல் கையை பார்த்துக் கொண்டு 10 முறை மூச்சை உள்ளிழுத்து விடவும்.

* பிறகு மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே நிமிர்ந்து வரவும்.

* மூச்சை வெளிவிட்டபடியே கைகளை கீழே இறக்கி, வலது காலை திரும்ப கொண்டு வந்து இரண்டு கால்களை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

* சிறிது ஓய்வெடுத்துவிட்டு, இடது காலை அகட்டி இடது பக்கத்தில் செய்யவும்.

பலன்கள் :

* மார்பு இழுக்கப்பட்டு நுரையீரல்கள் விரிவடைவதால், மூச்சுப் பிரச்னைகள் வருவது தடுக்கப்படுகிறது.

* மேல் கையை பார்த்துக் கொண்டு நிற்கும்போது, கண்களில் மாற்றங்கள் நிகழ்வதால் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

* கண்பார்வையை ஒரே இடத்தில் பதியச்செய்து இருப்பதால், கவனம் அதிகரித்து பாடங்களை நன்கு மனதில் இருத்திக் கொள்ள உதவும்.

* கால்கள் இரண்டு கைகள் இரண்டு நன்கு இழுக்கப்படுவதால், நல்ல வளர்ச்சி இருக்கும்.

- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us