தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இரண்டு சட்டங்கள்

இரண்டு சட்டங்கள்

இரண்டு சட்டங்கள்


PUBLISHED ON : டிச 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

முறையான தேர்தல்கள் இல்லாததாலும், நிதிப் பற்றாக்குறையாலும், பின்தங்கிய சமூகத்திலிருந்து பிரதிநிதிகள் இல்லாததாலும், பஞ்சாயத்துகளால் திறம்படச் செயற்பட முடியவில்லை. இந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் விதமாக, சட்டத் திருத்தங்கள் இயற்றப்பட்டன.

73வது சட்டத் திருத்தத்தின்படி, அரசியல் சட்ட அமைப்பில் புதிதாக பகுதி 9வும், 74வது சட்டத் திருத்தத்தின்படி 9ஏவும் சேர்க்கப்பட்டன.

பகுதி 9இல் ஷரத்துகள் 243 - 243ஓ அடங்கும். அதில் மாவட்டம், கிராமம், கிராம சபை, இடைநிலை, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளின் விளக்கம் இருக்கும். (இதைப் பஞ்சாயத் ராஜ் சட்டம் என்று அழைக்கிறோம்).

ஊராட்சிகளின் கட்டமைப்பு, அதன் கால அளவு, பதவி இடங்களுக்கான ஒதுக்கீடு, ஊராட்சியை அமைப்பதற்கான தேர்தல், உறுப்பினர் பதவிக்கான தகுதிநீக்க வழிமுறை, வரிகளை விதிப்பதற்கு ஊராட்சிகளுக்குள்ள அதிகாரம், ஊராட்சிகளில் கணக்குகளைத் தணிக்கை செய்தல் என, அனைத்தும் வரையறுக்கப்பட்டன.

74வது சட்டத் திருத்தத்தின்படி 9ஏயின் கீழ் சரத்துகள் 243பி, - 243இசட், ஜி நகராட்சிகளுக்கான வரையறைகளைத் தெளிவாக்கின. (இதை நகர் பாலிகா சட்டம் என்று அழைக்கிறோம்).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us