தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எம்மொழியும் ஈடில்லை

எம்மொழியும் ஈடில்லை

எம்மொழியும் ஈடில்லை


PUBLISHED ON : ஜன 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

தொன்மையினும் தொன்மையான

தூய தமிழ்மொழி

வன்மையினும் வன்மையான

வண்ணத் தமிழ்மொழி

பண்களெல்லாம் பாடவல்ல

பாட்டுத் தமிழ்மொழி

எண்களுண்டு எழுத்துமுண்டு

எங்கள் தமிழ்மொழி

காப்பியங்கள் தோன்றியநற்

கரும்பு தமிழ்மொழி

பாப்புனைய யாப்புசொல்லும்

பாகுத் தமிழ்மொழி

வள்ளுவரைத் தந்து உலகம்

வணங்கும் தமிழ்மொழி

பள்ளு வஞ்சி பிள்ளைத்தமிழும்

படித்த தமிழ்மொழி

மக்கள் நாவில் நடம்புரியும்

மாண்புத் தமிழ்மொழி

சொற்கள் தொடர்கள் நன்கு தோன்றித்

துலங்கும் தமிழ்மொழி

எண்ணுதற்கும் எழுதுதற்கும்

ஏற்ற தமிழ்மொழி

கண்ணில் வைத்துப் போற்றுகின்ற

கன்னித் தமிழ்மொழி

அறத்தை மறத்தை அன்பை பண்பை

ஆக்கும் தமிழ்மொழி

திறத்தைப் பெருக்கித் தீரராக்கும்

தெளிந்த தமிழ்மொழி

செம்மொழியாய்ச் சீரடைந்து

சிறந்த தமிழ்மொழி

எம்மொழியும் ஈடேயில்லை

எங்கள் தமிழ்மொழி !

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us