sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

'கதைசொல்லி' மாமா

/

'கதைசொல்லி' மாமா

'கதைசொல்லி' மாமா

'கதைசொல்லி' மாமா


PUBLISHED ON : ஏப் 16, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாண்டுமாமா (வி.கிருஷ்ணமூர்த்தி)

21.4.1925 -- 12.6.2104

அரிமளம், புதுக்கோட்டை.


பலே பாலு, குஷிவாலி ஹரிஷ், அண்ணாசாமி, சமத்து சாரு போன்ற ஜாலி பாத்திரங்களை உங்களுக்குத் தெரியுமா? ஓநாய் கோட்டை, அதிசய நாய், ஷீலாவைக் காணோம், மேஜிக் மாலினி, மந்திரச் சலங்கை, துப்பறியும் புலி, மர்ம மனிதன், பவழத் தீவு, திகில் தோட்டம் இதுபோன்ற அசத்தலான காமிக்ஸ் கதைகளைப் படித்து இருக்கிறீர்களா? மேலே சொன்ன அத்தனையையும் தெரிந்துகொள்வதற்கு ஒருவரைத் தெரிந்துகொண்டால் போதும், அவர்தான் வாண்டுமாமா!

பள்ளியில் படிக்கும்போதே படங்கள் வரைவதில் அதிக ஆர்வம் இருந்ததால், ஆசிரியர்கள் வியக்கும் வகையில் ஓவியங்கள் வரைந்தார். ஓவியர் ரவிவர்மாவின் படங்களைப் பார்த்து வரைந்து கற்றுக்கொண்டார். அதனுடன் கதைகளும் எழுதினார். கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால், விளம்பர ஓவியங்கள், புத்தகங்களின் அட்டைப் படங்கள் வரைந்து தந்தார். பத்திரிகைகளில் வரைய வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது.

முதன்முதலாக 'கலைமகள்' இதழில் கதை எழுதினார். இவர் நடத்திய 'பாரதி' என்ற கையெழுத்துப் பத்திரிகை சென்னையில் நடைபெற்ற கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் முதல் பரிசு பெற்றது. பின்பு 'கௌசிகன்' என்ற புனைப்பெயரில் எழுதினார். இவரது திறனை அறிந்த ஓவியர் மாலி 'வாண்டுமாமா' எனப் பெயர்சூட்டி சிறுவர் கதைகள் எழுதக் கூறினார். 'வானவில்,' 'கிண்கிணி' ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.

அறிவியல் தகவல்கள், இயற்கை, தொழில்நுட்பம் உட்படப் பல்வேறு விஷயங்களை சிறுவர்களுக்காக எளிமையாக எழுதினார். 'வானவில்' சிறுவர் பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தி, அத்தனை சிறுவர்களையும் புத்தகம் படிக்க இழுத்து வந்தார். 'பூந்தளிர்' என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, சிறுவர் இலக்கியத்தில் பல புதுமைகளை நிகழ்த்தினார்.

அவர் எழுதிய 160 புத்தகங்களில் 100க்கும் அதிகமான புத்தகங்களை சிறுவர்களுக்காகவே எழுதினார். கதைகள், காமிக்ஸ், அறிவியல் தகவல்கள், வரலாற்று நிகழ்வுகள், புதிர்கள் என, சிறுவர்களின் வாசிப்பு உலகின் ராஜாவாக இருந்த வாண்டுமாமா எல்லாக் காலத்து சிறுவர்களுக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.






      Dinamalar
      Follow us