உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 06, 2018

அ நிறம் | அளவு
சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய பாதுகாப்புத்துறையின் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் (Defence Research and Development Organisation - DRDO) இயங்கி வருகிறது. இராணுவத்திற்குத் தேவையான தடவாளங்கள் இங்கு தயாரிக்கப்படுவது வழக்கம்.
கடந்த வாரம் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், சென்னை டி.ஆர்.டி.ஓ.வில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஆளில்லா டாங்கி முத்ராவும் இடம் பிடித்திருந்தது. இதன் அடுத்தகட்டப் பாய்ச்சலாக, போர்க்காலங்களில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ருஸ்டம் - 2 எனப்பெயரிடப்பட்ட இதன் சோதனை ஓட்டம், கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் மையத்தில் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக, டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
