
சிங்கம் , புலி, கரடி, மயில் எல்லாம் பார்க்க, நாம் காட்டிற்குப் போக வேண்டிய அவசியமில்லை. உயிரியல் பூங்காக்களுக்குச் சென்றாலே பார்த்து விடலாம். சென்னை நகருக்கு வெளியே அமைந்துள்ளது, அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு 1,500க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாலூட்டிகள் 47 வகை. பறவை இனங்கள் 63 வகை. ஊர்வன 31 வகை. நீர் மற்றும் நிலத்தில் வாழ்வன, மீன்வகைகள், பூச்சி இனங்கள் என, இந்தப் பூங்காவில் ஏராளமான உயிரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளோடு குழந்தையாய் நாமும் சென்று, விலங்குகளைப் பார்த்து ரசித்து விட்டு வரலாம். பூங்காவில் அமைந்துள்ள மரங்களின் நிழலிலும் கொஞ்சம் வெயிலாறி வரலாம்.
நுழைவுக் கட்டணம்
பெரியவர்களுக்கு 50 ரூபாய். 5 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு 20 ரூபாய்
பேட்டரி வாகனத்தில் பூங்காவை சுற்றிப் பார்க்க, பெரியவர்களுக்கு ரூ.100. சிறுவர்களுக்கு ரூ.50. சிங்கம் உலாவும் இடத்தை பார்வையிடுவதற்கு, பெரியவர்களுக்கு ரூ.50. சிறுவர்களுக்கு ரூ.20. செவ்வாய்க்கிழமை வார விடுமுறை.

