உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
சிங்கப்பூரில் உள்ள POSB என்ற வங்கி, வீடியோ டெல்லர் மெஷின் (வீ.டி.எம்.) மெஷினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பணம் எடுக்கும் போது சிக்கல் ஏற்பட்டு உதவி தேவை எனில், வீடியோ பட்டனை அழுத்தி வங்கி அதிகாரியுடன் நேரடியாக உரையாடி, சிக்கலைத் தீர்த்துக்கொள்ளலாம். சோதனை முயற்சியில் நிறுவப்பட்டு இருக்கும் இந்த வீ.டி.எம். சென்டர்கள் வெற்றி பெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல இடங்களில் வீ.டி.எம். களை ஏற்படுத்த POSB வங்கி திட்டமிட்டுள்ளது. பணம் எடுப்பதில் சிக்கல் வந்தால் ஒரு ஏ.டி.எம்மில் இருந்து மற்றொரு ஏ.டி.எம். ஓடும் சிக்கல் வீ.டி.எம்களால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
