தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தண்ணீர் சேகரிப்பை பள்ளியில் தொடங்கலாம்!

தண்ணீர் சேகரிப்பை பள்ளியில் தொடங்கலாம்!

தண்ணீர் சேகரிப்பை பள்ளியில் தொடங்கலாம்!


PUBLISHED ON : ஜூன் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

தண்ணீர், இயற்கையின் அனைத்து உயிர்களுக்கு உந்துசக்தி. தண்ணீர் இல்லாமல் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. இப்போது தண்ணீர் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

பள்ளிகளில் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சில எளிய முறைகள் இதோ:

* கை கழுவும் இடத்தில், 'குழாயை சரியாக மூடவும்' என்ற போஸ்ட்ரை ஒட்டுங்கள்.

* பள்ளியில் ஏதாவது குழாயிலிருந்து தண்ணீர் சொட்டினால், உடனடியாக ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

* கழிவறையில் தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காதீர்கள். சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.

* பள்ளி வளாகத்தில் வறட்சியைத் தாங்கும் மரக்கன்றுகளை நடுங்கள்.

* தண்ணீர் சேமிப்பு குறித்து, உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

* தண்ணீர் சேமிப்பு பற்றி, போட்டிகள் நடத்தி, பல மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

* தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் புதிய கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. கடுமையான தட்டுப்பாடு காலத்தில் பள்ளி வளாகத்தில் இவற்றைப் பொருத்தலாம்.

* தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, அதில் குடிநீரை நிரப்புங்கள். தேவையில்லாமல் தண்ணீர் பாட்டில் வாங்குவதைத் தவிருங்கள்.

* குடிநீர் மீதமானால், அதை கீழே கொட்டாமல், மரம், செடிகள் இருக்கும் இடங்களில் கொட்டுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us