தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படித்ததில் கேட்கிறோம்

படித்ததில் கேட்கிறோம்

படித்ததில் கேட்கிறோம்


PUBLISHED ON : ஜூன் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. இந்தியாவில், சிறந்த செவிலியர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும், 'தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதை இவ்வாண்டு, சுகந்தி என்பவருக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு சமீபத்தில் வழங்கினார். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. கேரளம்

ஆ. ஆந்திரம்

இ. தமிழகம்

ஈ. கர்நாடகம்

2. 'உலக நாடுகள் இந்தியாவில் அதிக அளவு முதலீடு செய்வதால், அந்த நாடுகளின் மாற்று இடமாக நம் நாட்டை மாற்றுவதாகக் கூற முடியாது. இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகவும் உயரிய இடத்தைப் பெறுவதற்கான தகுதி உள்ளது. அதையே செயற்படுத்தி வருகிறோம்' என சமீபத்தில் பேசியவர்?

அ. அமித்ஷா

ஆ. திரெளபதி முர்மு

இ. நரேந்திர மோடி

ஈ. ராஜ்நாத் சிங்

3. அமெரிக்கத் தலைநகர் நியூயார்க் நகரிலுள்ள, ஐ.நா. தலைமையகத்தில் சமீபத்தில் நடந்த யோகா தினக் கொண்டாட்டத்தில், தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட, 'டி -ஷர்ட்'கள் அணியப்பட்டன?

அ. சிவகாசி

ஆ. திருப்பூர்

இ. கோவை

ஈ. ஈரோடு

விடைகள்: 1. இ, 2. இ, 3. ஆ,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us