தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செய்தி அறிவோம்: முட்டை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்!

செய்தி அறிவோம்: முட்டை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்!

செய்தி அறிவோம்: முட்டை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்!


PUBLISHED ON : அக் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், தனிநபருக்கு தேவைப்படும் முட்டையில், பாதியளவு கூட நிறைவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, தனிநபருக்கு ஆண்டு ஒன்றுக்கு, 180 முட்டைகள் தேவைப்படுகின்றன.

ஆனால், தற்போதுள்ள முட்டை உற்பத்தி அளவுப்படி, வருடத்துக்கு 63 முட்டைகள் மட்டுமே, தனிநபருக்கு சராசரியாக கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, சர்வதேச முட்டை தினத்தை ஒட்டி, புதுடில்லியில் நடந்த மாநாட்டில் பேசிய, மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் கூறுகையில், இந்தியாவில், ஆண்டுக்கு 8,300 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோழி வளர்ப்பை, ஊக்கப்படுத்த மத்திய அரசு கடனுதவியும், மானியமும் வழங்குகிறது. இதன்மூலம், வேலைவாய்ப்பையும், தொழில்வாய்ப்பையும் பெருக்க முடியும். தற்போதுள்ள முட்டை உற்பத்தியை போல், இன்னும், மூன்று மடங்கு உற்பத்தி செய்தால்தான், நாட்டின் ஊட்டசத்து தேவையை பூர்த்தி செய்ய முடியும்' என்றார்.

dailypioneer.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us