sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்திகள் என்ன?

/

பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்திகள் என்ன?

பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்திகள் என்ன?

பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்திகள் என்ன?


PUBLISHED ON : ஆக 07, 2017

Google News

PUBLISHED ON : ஆக 07, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படிப்பது என்பது தேர்வுக்காக மட்டுமல்ல; பாடத்தைப் புரிந்துகொள்வதும் அவசியமானது. எதிர்காலக் கல்விக்கும், பணிக்கும் அதுவே உதவும். பாடங்களைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும், தேர்வுகளில் சிறப்பாகப் பங்களிக்கவும் பல்வேறு உத்திகள் உள்ளன. வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று மறந்துவிடுவது என்பது சரியல்ல. பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதுதான் அவசியம். 'பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள நீங்கள் பயன்படுத்தும் உத்திகள் என்ன' என்று சென்னை, உள்ளகரம், நியூ பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் உரையாடினோம்.

வெ.கீர்த்தனா: உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் படிக்கும்போது, படங்களைப் பார்த்து புரிந்துகொள்வதன் மூலம், நினைவில் வைத்துக்கொள்வேன். 'ஹை லைட்டர்' பயன்படுத்தி, முக்கியமானவற்றைக் குறித்து வைப்பேன். மறுபடி படித்துப் பயிற்சி செய்யும்போது எளிதாக இருக்கும். இதன் மூலம் படிப்பவை எப்போதும் மறக்காது. பாடங்களில் வரும் ஆண்டு எண்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள, தெரிந்தவர்களின் பிறந்த ஆண்டுகளோடு அவற்றைத் தொடர்புபடுத்தி நினைவில் வைத்துக்கொள்வேன்.

சீ.அபிஷேக் குரு: வகுப்பு நடக்கும்போது, குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். வேதியியல் சமன்பாடுகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பேன். இயற்பியல் பாடத்தை பலமுறை படித்துப் புரிந்துகொண்டு நினைவில் வைத்துக்கொள்வேன். கணிதத்தை பலமுறை எழுதிப் பயிற்சி செய்வேன். எவ்வளவு நேரத்தில் ஒரு கணக்கை போட்டு முடிக்க முடிகிறது என்பதையும் கணக்கிடுவேன். அப்போதுதான் தேர்வில் எழுதும்போது உரிய நேரத்திற்குள் எழுத முடியும்.

ச.அனுஷா: வகுப்பில் நடத்திய பாடங்களை வீட்டுக்குப் போனதும், அன்றே படித்துப் புரிந்துகொள்வேன். சந்தேகங்கள் இருந்தால் மறுநாள் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதனால் பாடத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. தேர்வுகளுக்குத் தயாராகும்போது பதற்றம் இருக்காது. நன்றாக நினைவில் இருக்கும். வாக்கிய அமைப்புகள் சரியாக வர வேண்டும் என்பதற்காக, திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பேன்.

பா.நந்தகுமார்: அதிகாலையில் எழுந்து படிப்பேன். அப்போதுதான் மனத்தில் பதிகிறது. கணிப்பொறி தொடர்பானவற்றை கணினியில் பயிற்சி செய்து பார்ப்பேன். மனப்பாடம் செய்து படிப்பது கிடையாது. அதனால் தேர்வுக்குத் தயாராகும்போது எளிதாக இருக்கும்.

சு.காயத்ரி: முக்கியமானவற்றை அடிக்கோடிட்டுப் படிப்பேன். 'கீ வேர்ட்ஸ்' வைத்துப் படித்தால் மறக்காமல் இருக்கும். படிக்கும்போது முழு கவனத்துடன் படிப்பேன். வேறு கவனச்சிதறல்கள் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்வேன். படித்த பாடங்களை கண்ணாடி முன் நின்று சொல்லிப் பார்த்துக் கொள்வேன்.

அ.ரா.ஸ்ரீநாத்: எனக்கு காலையைவிட இரவு நேரத்தில் படிப்பது பிடிக்கும். ஒவ்வொரு பாடத்திலும் தலைப்பு, உப தலைப்பு என குறிப்புகள் எடுத்துக்கொள்வேன். இதன்மூலம் தேர்வு எழுதும்போது, தேவையற்ற விஷயங்கள் எழுதுவதைத் தவிர்த்து, சரியான முறையில் பதில் அளிக்க முடியும். கணிதப் பாடத்தில் நிறைய கணக்குகளைப் போட்டுப் பார்த்து பயிற்சி செய்வேன். வகுப்பில் பாடத்தை கவனிக்கும்போதே, சிறு குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்வேன்.






      Dinamalar
      Follow us