sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

விண்வெளிக்குப் படையெடுத்தவர்

/

விண்வெளிக்குப் படையெடுத்தவர்

விண்வெளிக்குப் படையெடுத்தவர்

விண்வெளிக்குப் படையெடுத்தவர்


PUBLISHED ON : ஆக 07, 2017

Google News

PUBLISHED ON : ஆக 07, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரம் சாராபாய்

12.8.1919 - 30.12.1971

அகமதாபாத், குஜராத்


நவம்பர் 21, 1963 தும்பா ஏவுதளத்தில் இருந்து, முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவிய பிறகு உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. இத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழும்போது, தும்பாவில் விண்வெளி மையத்திற்கான கட்டடங்கள் இல்லை. அங்கிருந்த தேவாலயத்தில் வைத்தே எல்லா பணிகளையும் மேற்கொண்டனர். ராக்கெட்டுகளும் அதன் உதிரி பாகங்களும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது. இப்படிப் பல இன்னல்களுக்கு மத்தியில், விஞ்ஞானிகள் அனைவரும் உற்சாகமாக வேலை பார்க்கக் காரணமாக இருந்தவர் விக்ரம் சாராபாய்!

குஜராத் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்து, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் விக்ரம். அப்போது, இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நேரத்தில், இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கே அவருக்கு ஆசிரியராக வந்த சர். சி.வி. ராமன் வழிகாட்டுதலால், மின்காந்த நுண்ணலைகளின் விளைவுகள் குறித்து, ஆய்வுசெய்ய அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. உலகப் போர் முடிந்ததும், இங்கிலாந்து சென்று, முனைவர் பட்டத்துடன் நாடு திரும்பினார்.

மற்ற நாடுகளைப் போல் அறிவியலில் இந்தியாவும் முன்னேற வேண்டும் என்பதற்காக, அகமதாபாத்தில் விக்ரம் உருவாக்கியதே 'பிஸிகல் ரிசர்ச் லாபரட்ரி' (பி.ஆர்.எல்.) நிர்வாகத் துறைக் கல்வியை மேம்படுத்த, இந்திய மேலாண்மை நிறுவனத்தை (IIM) நிறுவி, அதன் தலைவராகவும் இருந்தார்.

1962ல், பிரதமர் நேரு இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக்குழுவை நிறுவி, அதன் தலைவராக விக்ரமை நியமித்தார். அதன் முதல் திட்டமாக, தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. ராக்கெட், ஆளில்லா உளவு விமானம், செயற்கைக்கோள் ஆகியவற்றின் வடிவமைப்பு, சோதனைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் முதல் ராக்கெட் மாதிரியைச் செய்யும் பணிகளில் விக்ரமுடன் அப்துல் கலாமும் இருந்தார்.

டாக்டர் ஹோமி பாபா மரணத்துக்குப் பிறகு, அணுசக்தி துறையும் விக்ரம் பொறுப்புக்கு வந்தது.

செயற்கைக்கோள் உதவியுடன், தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்றுவிக்கும் முயற்சி மூலம், 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார் விக்ரம். விண்வெளிக்குப் படையெடுத்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிர வைத்த விக்ரமுக்குப் பெருமை சேர்க்க, தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

விருதுகள்

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

பத்மபூஷண் விருது

பத்ம விபூஷண் விருது






      Dinamalar
      Follow us