தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஆக 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 7, 1925 - எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த நாள்

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்தியாவின் சிறந்த உயிரியல், சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை. இவரது ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், வேளாண்மை வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆகஸ்ட் 8, 1981 - ரோஜர் ஃபெடரர் பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர். உலகத் தரவரிசைப் பட்டியலில் 302 வாரங்களாக முதலிடத்தில் இருந்தார். 2008 ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். ஒற்றையர் ஆண்கள் பிரிவில் இதுவரை 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ஆகஸ்ட் 8, 1942 - வெள்ளையனே வெளியேறு நாள்

ஒத்துழையாமை இயக்கம், சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. காந்தியின் அழைப்பால் ஏற்படுத்தப்பட்ட இது 'ஆகஸ்ட் புரட்சி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பதே, இந்தப் போரா ட்டத்தின் முக்கிய நோக்கம்.

ஆகஸ்ட் 10, 1894 - வி.வி. கிரி பிறந்த நாள்

இந்தியக் குடியரசின் நான்காவது ஜனாதிபதி. தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்டார். 1967ல் குடியரசு துணைத் தலைவராக இருந்து, 1969 முதல் 1974 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். 1975ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 12, 1998 - சர்வதேச இளைஞர் நாள்

இளைஞர்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆகஸ்ட் 13, 1926 - ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள்

கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளர், அரசியல்வாதி. அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து, புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து அதிபரானார். உலகிலேயே அதிக காலம் (49 ஆண்டுகள்) ஆட்சி செய்து, மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us