தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு என்ன? ஐ.நா. அறிக்கை
தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு என்ன? ஐ.நா. அறிக்கை
PUBLISHED ON : மார் 27, 2017

உலக தண்ணீர் பற்றாக் குறையைப் போக்க, தண்ணீர் மறுசுழற்சியே முக்கிய தீர்வு என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ' மக்கள்தொகை பெருக்கத்தால், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கு, தண்ணீர் மறுசுழற்சியே முக்கிய தீர்வாகும். உலக அளவில், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வெற்றிகரமாக தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் ஒருமுறை பயன்படுத்திய தண்ணீரை, மக்கள் மீண்டும் பயன்படுத்துவதில்லை. உலகில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஆண்டிற்கு ஒரு மாதமேனும் தண்ணீர் வறட்சியை எதிர்கொள்ளும் பகுதிகளில் வசிக்கின்றனர். குறிப்பாக, சீனா மற்றும் இந்தியாவில், தண்ணீர் பிரச்னை அதிகளவில் இருக்கிறது. ஆட்சியாளர்கள், சுத்தமான குடிநீரை வினியோகிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றனரே தவிர, பயன்படுத்திய தண்ணீரை எப்படி மறுசுழற்சி செய்வது என்பதில் அல்ல.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

