PUBLISHED ON : ஏப் 04, 2016
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும், சிப்பாய்க் கலகத்துக்கு முக்கியக் காரணம் நான்.
வங்காள பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் படை வீரர்களில் ஒருவன்.
உத்தரப் பிரதேசம், நாக்வா கிராமத்தில் பிறந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியில் 22ஆவது வயதில் இணைந்தேன். இந்தக் கம்பெனியின் 34ஆவது சிப்பாய்ப் படைப் பிரிவில் பணிபுரிந்து, மார்ச் 29, 1857ல் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினோம். இதை அறிந்த ராணுவ அதிகாரி ஒருவர் போராட்ட களத்தில் இருந்த சிப்பாய்களை நோக்கிச் சுட்டார். அப்போது, என்னுடைய வாளை உருவி அந்த அதிகாரியைத் தாக்கினேன். அதற்காக என்னைக் கைது செய்து ஒரு வார விசாரணைக்குப் பின் தண்டனை விதித்தார்கள்.
நாக்வா கிராம மக்கள் இப்போதும் என்னை அவர்களின் முன்னோராகவே கருதுகிறார்கள். இந்திய அரசு என்னுடைய நினைவாக அக்டோபர் 5, 1984ல் அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.
மங்கள் பாண்டே
பிறப்பு: ஜூலை 19, 1827
மறைவு: ஏப்ரல் 8, 1857
