தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குளவிப் பூ

குளவிப் பூ

குளவிப் பூ


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

குளவி என்றதும் 'கொட்டுமே... கொட்டிய இடத்தில் வீங்குமே...' என்று தோன்றுகிறதா?

அதே குளவி (Patchouli - பட்சவுலி) என்ற பெயரில் ஒரு பூந்தாவர வகைகூட இருக்கிறது. வாசனை நிரம்பிய பூக்கள் பூக்கும் செடி இது. இதன் தாயகம், ஆசியா. இது புதினா இனத்தைச் சேர்ந்தது. 2 அல்லது 3 அடி உயரம் வளரக் கூடியது.

இதன் பூவில் இருந்தும், தண்டில் இருந்தும் வாசனை திரவியங்கள், மூலிகைகள், மருந்துகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

இதன் இலையில் இருந்து டீ (Tea) தயாரிக்கப்படுகிறது. கீரையாகவும் பயன்படுத்துகிறார்கள். 18, 19ஆம் நூற்றாண்டில் சீனாவைச் சேர்ந்த பட்டு உற்பத்தியாளர்கள் துணிகளை ஏற்றுமதி செய்தனர். பட்டுத் துணிகளைப் பூச்சிகள் அரித்துவிடாமல் இருக்க, இதன் காய்ந்த இலைகளைத் துணிகளின் மேல் பரப்பி வைத்து ஏற்றுமதி செய்தார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us