தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கை நகம் ஏன் வேகமாக வளர்கிறது?

கை நகம் ஏன் வேகமாக வளர்கிறது?

கை நகம் ஏன் வேகமாக வளர்கிறது?


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

நகத்திற்கு அழகு சேர்க்க மருதாணி வைக்கிறோம். நெயில் பாலிஷ் போடுகிறோம். அழகாக வெட்டிப் பராமரிக்கிறோம்.

இதெல்லாம் கைவிரல் நகங்களுக்குத்தான்.

இந்த மரியாதை எல்லாம் கால் விரல் நகங்களுக்கு இல்லை, ஏன்?

காரணம், கால் நகங்கள் வேகமாக வளர்வதில்லை. கால் நகங்களை விட கை நகங்கள் வளரும் வேகம் மூன்று மடங்கு அதிகம்.

கையில் உள்ள நகங்கள் மட்டும் வேகமாக வளர்வது ஏன்?

இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, இதயத்துக்கு மிகக் குறைந்த தூரத்தில் கை நகங்கள் இருக்கின்றன. இதனால் அவற்றிற்கு ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தாராளமாகக் கிடைக்கின்றன.

இரண்டாவது, கால்களை நாம் பயன்படுத்துவதை விட, கைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இதுவும் கைவிரல் நகங்களின் வேக வளர்ச்சிக்குக் காரணமாம்.

மாதத்தில் 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு நம் கை நகங்கள் வளர்கின்றன.

வெட்டாமலேயே விட்டால், ஒரு மனிதரின் சராசரி ஆயுள் காலத்தில், அவரது நக நீளம் இரண்டாள் உயரத்தையும் தாண்டிவிடுமோ!?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us