தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : ஏப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்து, ஷ்ரூவ்பரி (Shrewsbury) என்கிற இடத்தில் பிறந்தேன். அன்னை இறந்த பின், மருத்துவரான அப்பா என்னை வளர்த்தார். சிறு வயதிலேயே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. உள்ளூரில் தொடக்கக் கல்வி கற்று, எடின்பரோ (Edinburgh) பல்கலையில் மருத்துவம் சேர்ந்தேன். மருத்துவம் படிக்க ஆர்வமின்றி இறையியல் கல்வி படிக்க கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலையில் சேர்ந்தேன். அங்கு தாவரவியல் பேராசிரியராக இருந்த ஹென்ஸ்லோ என் நண்பரானார். என்னுடைய 22ஆவது வயதில் 'பீகிள்' (Beagle) என்ற அரசுக் கப்பல் 1831ல் தென் அமெரிக்காவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் ஆராய்ச்சி செய்வற்காகத் தயாரானது. நண்பர் ஹென்ஸ்லோவின் முயற்சியால் அந்தக் கப்பலில் பயணிக்க எனக்கும் இடம் கிடைத்தது. தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் அட்லான்டிக் பெருங்கடல் என பல பகுதிகளுக்குச் சென்றோம்.

இந்த நீண்ட பயணத்தில் பல இயற்கை அதிசயங்களைக் கண்டேன்; பழங்குடி மக்கள் பலரைச் சந்தித்தேன்; ஏராளமான புதை படிவங்களை (Fossils) கண்டுபிடித்துச் சேகரித்தேன்; தாவர இனங்களையும், விலங்கினங்களையும் ஆராய்ந்தேன்.

அந்தக் குறிப்புகளை வைத்து 'The Voyage of the Beagle' என்ற புத்தகத்தை வெளியிட்டேன். அப்போதுதான் 'மரபு வழி என்பது ஒரே மாதிரியான வடிவத்தை ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்' என்பதைக் கண்டறிந்தேன். இதை விளக்கி நான் எழுதிய 'The Origin of Species by Natural Selection' என்கிற புத்தகம் அமோக வரவேற்பைப் பெற்றது. 'மனிதனின் முன்னோர் குரங்குகள்' என்பதை ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியபோது எழுந்த எதிர்ப்புகளுக்கும் கேலிகளுக்கும் நான் அஞ்சவில்லை. மொத்தம் 18 புத்தகங்கள் எழுதிய என்னை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin)

பிறப்பு: பிப்ரவரி 12, 1809

மறைவு: ஏப்ரல் 19, 1882


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us