தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜமைக்கா நாட்டில் உள்ள ஷெர்வுட் கன்டென்ட் எனும் சிறு நகரத்தில் பிறந்தேன். என் பெற்றோர் வெல்லெஸ்லி மற்றும் ஜெனிஃபர் போல்ட். சிறுவயதில் விளையாட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் நான் சிந்தித்ததில்லை. சகோதரருடன் தெருக்களில் கிரிக்கெட், கால்பந்து விளையாடுவதுதான் ஒரே பொழுதுபோக்கு.

துடுக்குத்தனமும் குறும்புத்தனமும் எனக்கு அதிகம். ஒருமுறை, தேர்வுப் போட்டிக்குப் பயிற்சி செய்ய வேண்டிய நேரத்தில், வண்டியின் பின்புறம் ஒளிந்துகொண்டு காவலரிடம் சிக்கினேன். அதனால், சிறந்த ஓட்டங்களை ஓடினாலும் என்னைக் குறித்தோ, என் ஓட்டப் பந்தயத்தைக் குறித்தோ தீவிரமான சிந்தனை எனக்கு இருந்ததில்லை.

என் சொந்த ஊரான கிங்ஸ்டனில், 2002 உலக இளையோர் தடகளப் போட்டிகளில், தங்கம் வென்ற இளம் வீரர்களுள் நான் மிகவும் இளமையானவன். ஊர் மக்களின் எதிர்பார்ப்பு எனக்குப் பெரும் பதற்றம் தந்தது. அதனால், காலணிகளை மாற்றி அணிந்து பந்தயத்தில் ஓடினேன். இந்த அனுபவம் பின்னாளில், பந்தயத்தின் முன் தோன்றும் பதற்றத்தில் இருந்து என்னைக் காத்தது.

பெய்ஜிங் (2008) ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.69 வினாடியில் கடந்து சாதனை படைத்துத் தங்கம் வென்றேன். பெர்லினில் 2009ல் நடந்த உலக தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடியில் கடந்து என் ஒலிம்பிக் சாதனையை நானே முறியடித்தேன். இதன்மூலம் உலக மற்றும் ஒலிம்பிக் போட்டியில், ஓட்டத்தில் சாதனை மற்றும் தங்கம் வென்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றேன். லண்டன் (2012) ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர் ஓட்டத்தை 9.63 வினாடியில் கடந்தேன்.

எனக்குப் போட்டியாக எந்த வீரரையும் நினைப்பதில்லை. களமிறங்கும் ஒவ்வொருவருமே எனக்குப் போட்டியாளர்தான். என் வேகத்தை மின்னலுடன் ஒப்பிடுவார்கள். நான் ஒரு 'மின்னல் வீரன்'.

உசைன் போல்ட் தடகள வீரர்

பிறப்பு: ஆகஸ்ட் 21, 1986


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us