தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கோட்டைகள் கலைநயத்தின் காட்சிகள்

கோட்டைகள் கலைநயத்தின் காட்சிகள்

கோட்டைகள் கலைநயத்தின் காட்சிகள்


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னர் காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டவை கோட்டைகள். அந்தக் காலத்துக் கட்டடக் கலையையும், அரசர்களின் போர்த்தந்திரங்களையும் அறிந்துகொள்ள முடிகிற அரிய சாட்சிகளாகத் திகழ்கின்றன.

* கோட்டைகள் பலவிதமாக உருவாக்கப்படுகின்றன. சில கோட்டைகள், மன்னர் தங்குமிடம், போர் வீரர்களுக்கான வசதிகள், அரச அலுவலகங்கள்,

முக்கியமானவர்கள் தங்குமிடம் போன்றவற்றை உள்ளடக்கியவை. சில கோட்டைகள் நகரங்களையே அவற்றுள் அடக்கியிருந்தன. இந்தக் கோட்டைகளின் மதில்கள் எதிரிகள் கடப்பதற்குக் கடினமாக இருப்பதற்காக உயரமாக உருவாக்கப்பட்டவை.

* மதில் சுவர்களில் போர்வீரர்கள் கண்காணிப்பதற்கான காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

* கோட்டை மதில் சுவர் இடையில் முக்கியமான சில இடங்களில் மட்டும் வாசல்கள் அமைக்கப்பட்டு, உறுதியான கதவுகளினால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

* கோட்டைகள் பல ஆழமான அகழிகளால் சூழப்பட்டு இருக்கும். கோட்டை வாயிலை அணுகுவதற்காக அகழிக்குக் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டிருக்கும். தேவை ஏற்படும்போது இந்தப் பாலங்கள் எடுத்துவிடக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் மிக முக்கியமான சில கோட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

மெஹ்ரான்கர் கோட்டை

ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம்.

கட்டியவர்: ராவ் ஜோதா

கட்டப்பட்ட வருடம் : 1460

150 மீட்டர் - உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. - நுழைவாயில்கள்: 7

மதில் சுவர்: 118 அடி உயரம் / 69 அடி அகலம்

செங்கோட்டை

டில்லி மாநிலம்

கட்டியவர்: ஷாஜகான் / காலம்: 17ஆம் நூற்றாண்டு

கோட்டை நீளம்: 2.41 கி.மீ.

நுழைவாயில்கள்: 2 (லாகூர் கேட் / இந்தியா கேட்)

உஸ்தாத் அஹமத் எனும் கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. (1639- 1648)

கோல்கொண்டா கோட்டை

தெலுங்கானா மாநிலம்

கட்டியவர்: ககாதியா அரசர்கள்

காலம்: 13ஆம் நூற்றாண்டு

சீரமைத்துக் கட்டியவர்: இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி

காலம்: 16ஆம் நூற்றாண்டு

பரப்பளவு: 11 கி.மீ. / சுற்றுச்சுவர்: 7 கி.மீ.

நுழைவாயில்கள்: 8

குவாலியர் கோட்டை

மத்தியப் பிரதேச மாநிலம்

கட்டியவர்: ராஜா மான்சிங் தோமார்

காலம்: 15ஆம் நூற்றாண்டு

பரப்பளவு: 3 சதுர கி.மீ.

கோட்டைக்கு உள்ளே உள்ள அரண்மனைகள்: 6

இந்தக் கோட்டை 'இந்தியாவின் ஜிப்ரால்டர்'

என்று அழைக்கப்படுகிறது.

ஆக்ரா கோட்டை

உத்தரப் பிரதேச மாநிலம்

கட்டியவர்: ரஜபுத்திரர்கள் காலம்: 11ஆம் நூற்றாண்டு

சீரமைத்துக் கட்டியவர்: அக்பர்

வருடம்: 1573 மதில் சுவர் உயரம்: 70 அடி

15 லட்சம் பேர் கட்டடப்பணியில் ஈடுபட்டவர்கள்

பரப்பளவு: 2.5 சதுர கி.மீ.

செஞ்சிக் கோட்டை

விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு

கட்டியவர்: பல்லவ மன்னர் செஞ்சியர் காடவர் கோன்

காலம்: 11ஆம் நூற்றாண்டு

மதில் சுவர் உயரம்: 60 அடி / அகழி அகலம் 80 அடி

12 கி.மீ. நீளமுள்ள முக்கோண வடிவ மதில் சுவர்களால் இணைக்கப்பட்டுள்ளது.

சித்தோர்கர் கோட்டை

ராஜஸ்தான் மாநிலம்.

கட்டியவர்: மௌரியர்கள்

காலம்: 7 ஆம் நூற்றாண்டு

180 மீட்டர் உயர மலை மீது அமைந்துள்ளது. - நுழைவாயில்கள்: 7

பரப்பளவு: 700 ஏக்கர்

ஜெய்சல்மேர் கோட்டை

ராஜஸ்தான் மாநிலம்.

கட்டியவர்: ராவல் ஜெய்சல்

கட்டப்பட்ட வருடம்: 1156

நீளம்: 1500 அடி / அகலம்: 750 அடி

சுற்றுச் சுவர் உயரம்: 30 அடி

காவல் கோபுரங்கள்: 99

ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை

கர்நாடகா மாநிலம்

கட்டியவர்: விஜய நகரப் பேரரசர் திம்மண்ண நாயக்கர்

கட்டப்பட்ட வருடம்: 1454

சீரமைத்துக் கட்டியவர்: திப்பு சுல்தான்

காலம்: 1782

நுழைவாயில்கள்: 4

வேலூர் கோட்டை

தமிழ்நாடு

கட்டியவர்: குச்சி பொம்மு நாயக்கர்

காலம்: 16ஆம் நூற்றாண்டு / பரப்பளவு: 133 ஏக்கர்

அகழி: 191 அடி அகலம் / 29 அடி ஆழம்

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சிப்பாய் கலகம் 1806ஆம் ஆண்டு இங்கு நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us