sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/யார் இவர்கள்?

யார் இவர்கள்?

யார் இவர்கள்?


PUBLISHED ON : ஜூன் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2023


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது விளையாடியும் வருகின்றனர். அவர்களில் ஒரு சிலரைப் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு யார் என்று கண்டுபிடிக்கவும்.

1. இந்திய டென்னிஸ் வீரர்கள் இவர்கள். 1951, 53, 55ஆம் ஆண்டுகளில் பிறந்த மூவரும் சகோதரர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் ஹாலிவுட், தமிழ்த் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். விம்பிள்டன் காலிறுதியில் விளையாடினார் ஒருவர். மற்ற இருவரும் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். யார் அந்தச் சகோதரர்கள்?

2. இந்திய கிரிக்கெட் அணி ௧983இல் உலகக்கோப்பை வென்றபோது, அந்த அணியில் இடம்பெற்றிருந்த சகோதரர்கள் இவர்கள். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் (Patiala) பிறந்தவர்கள். இவர்களில் ஒருவர் 120 ரன்கள், மூன்று விக்கெட்டுகள் எடுத்து, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாகவும் இருந்தார். யார் இந்தச் சகோதரர்கள்?

3. இந்திய கிரிக்கெட் அணியில் 2003 முதல் 2018 வரை இடம்பெற்றிருந்த சகோதரர்கள் இவர்கள். இருவருமே ஆல்ரவுண்டர்கள். என்றாலும், ஒருவர் வேகப்பந்து வீச்சாளர். அதிரடியாக ஆடுபவர். மற்றொருவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், நிதானத்தைக் கடைபிடிப்பவர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்தச் சகோதரர்கள் யார்?

4. இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரர்கள் இவர்கள். ஒருவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்தவர். மற்றவர் லக்னோ அணிக்காக விளையாடியவர். இவருவருமே ஆல்ரவுண்டர்கள். குஜராத்தில் பிறந்த இந்தச் சகோதரர்கள் யார்?

விடைகள்:

1. விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ், அசோக் அமிர்தராஜ்

2. மொகிந்தர் அமர்நாத், சுரிந்தர் அமர்நாத்

3. இர்பான் பதான், யூசுப் பதான்

4. ஹர்திக் பாண்டியா, கருணால் பாண்டியா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us