sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சரித்திரம் பழகு பேய்க்குப் பயந்த தலைவர் யார்?

/

சரித்திரம் பழகு பேய்க்குப் பயந்த தலைவர் யார்?

சரித்திரம் பழகு பேய்க்குப் பயந்த தலைவர் யார்?

சரித்திரம் பழகு பேய்க்குப் பயந்த தலைவர் யார்?


PUBLISHED ON : செப் 30, 2024

Google News

PUBLISHED ON : செப் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் பக்கத்தில் இருந்த மனைவி, என்னை விடவும் தைரியமாகவே இருந்தாள். நான் இருட்டைக் கண்டு பயப்படுவேன். பேய், பிசாசு போன்றவற்றை நினைத்தும் பயப்படுவேன். கொள்ளைக்காரர்கள் வந்து விடுவார்களோ என்றும் நினைப்பேன். ஆனால் என்னை விட தைரியமாக இருக்கும் ஒருத்தியிடம் போய், என் பயத்தை எப்படிச் சொல்வது? தவிரவும் நான் பயப்படுகிறேன் என்பதை அவளிடம் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவளுக்குப் பாம்புகள், பேய், பிசாசு பற்றி எல்லாம் துளி கூடப் பயம் இல்லை.

என் நிழலாக எப்போதும் இருந்தவள் அவள். என்னுடைய அத்தனைச் செயல்பாடுகளிலும் என் மனைவி, இணக்கமாக இருந்ததால்தான் என்னால் பொது வாழ்க்கையில் ஈடுபட முடிந்தது. என்னுடைய அத்தனைப் போராட்டங்களிலும், அவள் தன்னை இணைத்துக்கொண்டாள்.

என் மனைவி எதற்கும் பணிந்து போகிறவளோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்கு வருகிறவளோ அல்ல. அதே சமயம், எது நியாயமானது, சரியானது என்று கருதுகிறாளோ அந்தக் கருத்தில் உறுதியாக இருந்தாள். எங்கள் இருவரிடையே நிறைய வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. என்றாலும் அவளின் நிகரற்ற சகிப்புத்தன்மையால், இறுதியில் சமாதானமே நிலைத்தது.

அவள் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவள். வசதியாக வாழ்ந்தவள். ஆனால், நான் எளிய வாழ்க்கை வாழ்வது என்று உறுதி எடுத்துக்கொண்ட போது, மனம் உவந்து ஏற்றுக்கொண்டாள்.

நான் பலவிதமான சத்திய சோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, என் மனைவி அவற்றை அன்றாட வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருந்தாள். நாட்டு விடுதலைக்காக அவ்வப்போது என் மனைவியும் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றாள்.

ஆறாவது முறையாக 1938இல், அவள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டாள். அவளைச் சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை. வாரத்திற்கு ஒரு முறை, எனக்கு மட்டும் கடிதம் எழுத அனுமதித்தது ஆங்கிலேய அரசு. அப்போது என் மனைவிக்கு வயது 69.

தன் மனைவியைப் பற்றி உயர்ந்த மதிப்பீடு கொண்டிருக்கும் இந்தத் தேசத் தலைவர், யார்?

விடைகள்: மகாத்மா காந்தி. அவரது மனைவி கஸ்தூரிபாய் பற்றிக் கூறியது.






      Dinamalar
      Follow us