sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/கோள்களின் உயரத்தில் மாற்றம் ஏன்?

கோள்களின் உயரத்தில் மாற்றம் ஏன்?

கோள்களின் உயரத்தில் மாற்றம் ஏன்?


PUBLISHED ON : அக் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சூரியனிடம் இருந்து கோள்கள் விலகினால், பூமியில் இருந்து அவற்றைப் பார்க்கும்போது, அடிவானில் இருந்து அவற்றின் உயரம் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். வியாழன், வெள்ளி விலகுவதால் அவை இருக்கும் உயரம் அதிகரிக்கிறது. மாறாக கோள்கள் சூரியனை நோக்கி நகர்ந்தால், பூமியில் இருந்து பார்க்கும்போது, அடிவானில் இருந்து அவை இருக்கும் உயரம் சிறிதுசிறிதாகக் குறையும். சனி இருக்கும் உயரம் குறைவது இதனால்தான்.



உயரத்தை எப்படி அளப்பது?:
அக்.15 முதல் 31 வரை மாலை 6.30க்கு, மேற்கு அடிவானிலிருந்து கோள்கள் இருக்கும் குத்துயரத்தினைப் (Vertical altitude - வெர்டிகல் ஆல்ட்டிடியூட்) படம்: 1 விளக்கும். குத்துயரத்தினை கோண அளவில் குறிப்பிடுவார்கள். அதை எளிதாக அளக்கலாம். வானம் ஓர் அரைக்கோளம்தானே! அதனால், கிழக்கில் இருந்து மேற்கு அடிவானம் வரை 180 டிகிரி. அடிவானில் இருந்து உச்சிவான் வரை 90 டிகிரி. உங்கள் கையை நீட்டி, விரல்களை மடக்கிக்கொண்டு வானைப் பார்த்தீர்களேயானால், உங்கள் கைமுஷ்டி வானை மறைக்கும் கோண அளவு 10 டிகிரி.



10.முக்கிய வான் நிகழ்வுகள்:
அக்டோபர் 21ஒரு வால் நட்சத்திரத்தின் பாதையை பூமி கடக்கும் போது, வால்மீனின் உதிரிகள் நம் வளிமண்டலத்தில் உராய்ந்து ஒளிக்கீற்று தூறல்கள் போல் கீழே வேகமாக விழும். இவற்றையே நாம் எரிகற்கள் என்று அழைக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் அக். 21 அன்று ஹாலி வால் நட்சத்திரத்தின் (Halley's Comet ஹாலீஸ் காமெட்)பாதையை பூமி கடக்கும். அப்போது அதிக எண்ணிக்கையில் எரிகற்கள் விழுவதை நம்மால் காண முடியும். இவை வேட்டைக்காரன் விண்மீன் தொகுதியில் (Orion Constellation - ஓரியன் கான்ஸ்டலேஷன்) இருந்து விழுவதுபோல் தோன்றுவதால், 'வேட்டைக்காரன் எரிகல் தூறல்கள்' (Orionid meteor shower - ஓரியனாய்ட் மீட்டியார் ஷவர்) என்று அழைக்கப்படுகின்றன. அதிகாலை 3 மணியில் இருந்து, விடியும் வரை, மொட்டை மாடியில் கிழக்கு நோக்கிப் படுத்துக்கொண்டு, உச்சிவானை தொடர்ந்து நோக்கினால், எரிகற்கள் விழுவதைக் காணலாம். இந்த வருடம் அக். 21 தேய்பிறை நாள். அதனால் 50% நிலவொளியில் இதைக் காண்பது கடினம். இருந்தாலும் அதிகாலையில் முயற்சிக்கலாம்.

அக்டோபர் 30: அமாவாசை வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us