தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன


PUBLISHED ON : செப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரவில் வானம் முழுக்க மின்னும் நட்சத்திரங்களை நீங்கள் ரசித்திருப்பீர்கள்.

சூரியனை விடவும் பல கோடி மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதனால் நம் கண்களுக்கு அவை குட்டியாகத் தெரிகின்றன. சூரியனைப் போல் 20 முதல் 100 மடங்கு பெரிய விண்மீன்கள் வானில் உள்ளன. சூரியன்தான் நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனுக்கு அடுத்து உள்ளது பிராக்சிமா சென்டாரி ( Proxima Centauri) என்ற நட்சத்திரம். ஆனால் அதனுடைய ஜொலிப்பு குறைவு என்பதால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அல்பா சென்டாரி (Alpha Centauri) என்ற நட்சத்திரம் பிராக்சிமாவை விட தூரமாக இருந்தாலும் ஜொலிப்பு அதிகம் என்பதால் கண்களுக்குத் தெரியும்.

நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. வளி மண்டலத்தில் உள்ள காற்றை அவற்றின் ஒளி கடந்து வரும்போது நம் கண்களுக்கு மின்னுவது போல் தோற்றம் தருகின்றன.

விண்மீன்களின் ஒளி பூமியை வந்தடைய பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வெப்ப நிலைகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

நட்சத்திரங்கள் சிவப்பு, பழுப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, நீலம், வெண்மை நிறத்தாலானவை.

சுமாராக 20 (200 பில்லியன்) ஆயிரம் கோடியில் இருந்து, நாற்பதாயிரம் கோடி (400 பில்லியன்) நட்சத்திரங்கள் வரை வானில் இருக்கக்கூடும் என்று வானவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

நட்சத்திரத்தில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டால் விரிவடையும் தன்மை பெறுகின்றன. அப்பொழுது அவை சூரியனை விட நூறு மடங்கு வரை பெரியதாகும் தன்மையை அடைகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us