தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நூலகம் செல்வேன்!

நூலகம் செல்வேன்!

நூலகம் செல்வேன்!


PUBLISHED ON : அக் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நூலகம் என்பது வெறும் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் இடம் மட்டுமல்ல; அறிவுச்சுரங்கம் என்றால் அது மிகையாகாது. இன்றைய மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அறிந்துகொள்ள, “உங்கள் பள்ளி நூலகத்தை எவ்வாறு / எதற்குப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருந்தோம். மதுரை, விளாச்சேரி, இந்தியன் 3சி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் குரல் அறிய அவர்களை நேரில் சந்தித்தோம்.

ஐசத்ரிபா, 7ஆம் வகுப்பு

நாம காசுகொடுத்து வாங்கினா ஒரு புக்குதான் வாங்க முடியும். ஆனால், நூலகத்தில் பல வகை நூல்களைப் படிக்கலாம். அதனாலேயே நூலகம் போவேன். வகுப்பு இல்லாத நேரத்தில் கூச்சல், வீண் பேச்சைத் தவிர்க்க நூல்கள் படிப்பது பயன்படுது.

ஐஸ்வர்யா, 9ஆம் வகுப்பு

பள்ளி நூலகத்தையே பயன்படுத்துகிறேன். பாடம் தொடர்பாகக் கூடுதலாக அறிந்துகொள்ள நூலகம் சென்று தேடுகிறேன். இது கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. புரியாததை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

ரேஷ்மா, 8ஆம் வகுப்பு

எங்கள் பள்ளியில் பொது நூலகமும், 6ஆம் வகுப்பிற்கு மேல் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நூலகம் உள்ளது. இதனால் புத்தகங்களை மாணவர்கள் படிக்க முடிகிறது. எனக்கு முதலில் வாசிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால், நூலகத்திற்குச் சென்று புத்தகத்தில் படங்கள் பார்த்தேன். பின் தலைப்பை வாசித்தேன். ஒரு புத்தகத்தை வாசிக்காமல் இருப்பதில்லை.

சிவாநாத், 6ஆம் வகுப்பு

வார இறுதி நாட்களில் நிச்சயம் நூலகம் செல்கிறேன். குட்டிக்குட்டி கதைகள், பொதுஅறிவு நூல்கள் பிடிக்கும். சில புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கிறேன். புரியாததை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்.

கிஷோர், 6ஆம் வகுப்பு

எனக்கு ஓவியம் வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். அது பற்றிய புத்தகங்களை நூலகத்தில் எடுத்துப் படிப்பேன். படம் வரைவது பற்றித் தெளிவுபடுத்திக் கொள்வேன்.

சாருகேசி, 8ஆம் வகுப்பு

எனக்குப் படக்கதைப் புத்தகங்கள் பிடிக்கும். இதற்காக அடிக்கடி நூலகம் செல்வேன். கதையோ பாடமோ படக்கதை வடிவில் இருந்தால் வாசிக்க எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us