தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கல்வியாளருக்கு மகாவீர் விருது!

கல்வியாளருக்கு மகாவீர் விருது!

கல்வியாளருக்கு மகாவீர் விருது!


PUBLISHED ON : அக் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனந்த் குமார்

பீகாரின் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர் ஆனந்த் குமார். இவர் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஐஐடி தேர்வுகளுக்குத் தயார்செய்து சாதனை செய்தவர். இவரது நுட்பமான திறன்வாய்ந்த பயிற்சி முறைகள் காரணமாக, 2018ஆம் ஆண்டு 422 மாணவர்கள் ஐஐடி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்தனர்.

இதன்பிறகுதான் இவரது பயிற்சி முறைகள் உலகப் புகழ்பெற்றது. கணித ஆசிரியரான ஆனந்த் குமாரைப் பற்றிய ஆவணப்படமும் டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியானது. இவருக்கு தற்போது மகாவீர் விருது வழங்கப்பட்டுள்ளது. பகவான் மகாவீர் பௌண்டேஷன் எனும் அமைப்பு ஆனந்திற்கு இந்த விருதை கல்விப்பிரிவின் கீழ் வழங்குகிறது. ”எனக்கு வழங்கப்பட்ட விருதை பெரும் கௌரவமாக உணர்கிறேன். வறுமையில் உள்ள படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதை இந்த விருது ஊக்குவிக்கும்” என்றார் ஆனந்த் குமார்.

சூப்பர் 30 நுட்பம்!

பீகாரில் இந்தி வழியில் அரசுப் பள்ளியில் படித்தவர் ஆனந்த் குமார். அப்பா, கணக்கர் என்பதால், பெரிய பள்ளிகளில் படிக்கும் வசதி இல்லை. கணக்குப்பாடத்தில் ஆர்வம் காட்டிய ஆனந்த் குமார் பிற மாணவர்களுக்குப் பாடம் நடத்தி கிடைத்த பணத்தில் படிப்புச் செலவுகளைச் சமாளித்தார். மேற்படிப்பு படிக்க இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து இடமும் கிடைத்தது. ஆனால், அங்கு செல்வதற்கான பணம் இல்லை என்பதால் தன் கனவை வேதனையுடன் கைவிட்டார். இந்த நிலை பிறருக்கு ஏற்படாமலிருக்க உழைக்கத் தொடங்கினார். உயர்கல்வி மாணவர்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கினார்.

பாட்னாவில் இராமானுஜன் கணிதப்பள்ளி (RSM) அப்படித்தான் பிறந்தது. அதில் தொடக்கத்தில் இரண்டு மாணவர்களைப் பயிற்றுவிக்கத் தொடங்கி, இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து ஐஐடிக்கான தேர்வை எழுத வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்தி, வெற்றிகண்டார். இத்திட்டம் வெற்றிபெற ஆனந்த் குமார் இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் அறியப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us