உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 27, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் அசத்திய அர்ஜென்டினா அணி 4 - 0 என அமெரிக்காவை வீழ்த்தியது. இதில் ஒரு கோல் அடித்ததன் மூலம், அர்ஜென்டினா அணிக்கு அதிக கோல் (112 போட்டி, 55கோல்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை கேப்டன் மெஸ்சி அடைந்தார். இதற்கு முன், முன்னாள் வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா 54 கோல்கள் (78 போட்டி) அடித்ததே சாதனையாக இருந்தது. மெஸ்சியின் 'மேஜிக்' ஆட்டம், சிலி அணிக்கு எதிரான ஃபைனலிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
