தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாம்புகள் சாலைகளில் வருவானேன்?

பாம்புகள் சாலைகளில் வருவானேன்?

பாம்புகள் சாலைகளில் வருவானேன்?


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, உலகெங்கும் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, பாம்புகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. சாலைகளில் பாம்புகள் இறக்கும் நிலை நகர்ப்புறங்களை ஒப்பிடுகையில், கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகம்!

பாம்புகள் சாலைகளுக்கு ஏன் வருகின்றன?

பாம்புகள், வெப்பத்தை விரும்பும் உயிரினம். திறந்தவெளிச் சாலைகளில் வெப்பம் கிடைப்பதால், அங்கு வருகின்றன. இதனுடைய இரத்தம் குளிர்ந்த ரகம் என்பதால், வெப்பம் தேவைப்படுகிறது. இவை எப்போதுமே உடல் வெப்பத்தைச் சரியான அளவில் பராமரிக்க, புற வெப்பநிலையையே நம்பியுள்ளன.

சாலைகளில் சூரியஒளி நேரடியாகப் படுவதால், தார்ச் சாலைகள் எப்போதும் கதகதப்பாகவே இருக்கும். பாம்புகள் பொதுவாக, விடியற்காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளுக்கு வரும். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி இறக்கின்றன.

எதிர்பாராத சமயத்தில், மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனங்கள் பாம்பின் மீது ஏறினால், அவை வலியால் நம்மைக் கடிக்க வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களுக்குள்ளேகூட பாம்புகள் நுழைய வாய்ப்பு உண்டு.

தீர்வு

இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும்போது, முன்புற விளக்குகளைப் பயன்படுத்தலாம். மிதவேகத்தில் வாகனங்களை இயக்கும்போது, நம்மால் சரியான நேரத்தில் வேகத்தடுப்புக் கருவியை உபயோகிக்க முடியும். இதனால், பாம்பைக் கொல்லாமல், தடுப்பது மட்டுமன்றி, நாமும் பாம்பிடம் கடிபடாமல் தப்பிக்க முடியும்.

- முனைவர்.ந.ச.மனோஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us