தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உஷாரான குருவி!

உஷாரான குருவி!

உஷாரான குருவி!


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீச்சாங்குருவி

ஆங்கிலப் பெயர் : ஷ்ரைக் (Shrike)

குடும்பம் : லனிடே (Laniidae)

அளவு : 16 செ.மீ.- 25 செ.மீ.

வாழ்விடம் : யுரேசியா, ஆப்பிரிக்கா


கிராமங்களில் எளிதில் காணப்படும் பறவை இது. முட்புதர் கொண்ட இடங்களில் காணலாம். கீச்சாங்குருவிகளுள் பல வகை உண்டு. எல்லா வகைப் பறவைகளுக்கும் அலகு தனித்து, நுனி வளைந்து காணப்படும். 'சாம்பல் தகவிலான்' என்ற வகையை நாம் தமிழகப் பகுதிகளில் காண முடியும். உயரமான காய்ந்த மரங்களைத் தேர்வு செய்யும் இயல்புடையது; கூட்டமாகக் காணப்படும். உடலின் மேற்பகுதி, சாம்பல் நிறமாக இருக்கும்; கீழ்ப்பகுதி பழுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்து காணப்படும். கீச்சாங்குருவியின் அலகு, அடர்த்தியான சாம்பல் நிறத்தில் இருக்கும். பூச்சிகள், சிறு பல்லிகள், வெட்டுக்கிளிகள் போன்ற சிற்றுயிர்களை வேட்டையாடி உண்ணும்.

உயரமான இடமாகத் தேர்வு செய்து, இரை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும். இரையைக் கண்டதும், வேகமாகப் பறந்து, இரைமேல் பாய்ந்து பிடிக்கும். அதேபோல், இதனுடைய இன்னொரு குணம், உணவை முழுவதுமாகத் தின்னாது. மரத்தின் முட்களில் இரையைக் குத்தி வைத்துக் கொள்ளும். பசிக்கும்போது, அவ்வப்போது எடுத்து உண்ணும். இதனுடைய இரையை யாராவது திருட வந்துவிட்டால், விடாமல் துரத்தி விரட்டும். உணவைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் சாமர்த்தியப் பறவை இது. இதனுடைய குரல், சிலசமயங்களில் இனிமையான பாடல் போல் கேட்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us