PUBLISHED ON : டிச 11, 2023

இன்று அனைத்து தரப்பினருக்கும் எளிதாகக் கிடைக்கும் அன்னாசிப் பழம் எனப்படும் பைனாப்பிள், 18ஆம் நூற்றாண்டில் செல்வந்தர்களுக்கே உரியதாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? அப்போது வெப்ப மண்டலங்களில் மட்டுமே பைனாப்பிள் விளைந்தது. அரிதாக இருக்கும் இந்தப் பழம் ஐரோப்பியர்களால் அதிகம் விரும்பப்பட்டது.
அன்னாசிப் பழங்களைப் பயிரிட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சவாலானது. இதனால், இந்தப் பழத்தின் விலை அதிகமாகவே இருந்தது. அன்னாசிப் பழங்கள் பெரும்பாலும் சமூகக் கூட்டங்கள், செல்வந்தர்கள் வீட்டு நிகழ்வுகளில் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டன. இந்தப் பழங்களை வைத்திருப்பதோ, மற்றொருவருக்கு வழங்குவதோ ஒருவரது நிதிநிலை மற்றும் சமூக அந்தஸ்தைக் காட்டும் விதமாக இருந்தது.
தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவதற்காக, சிலர் அன்னாசிப் பழங்களை வாடகைக்கு எடுக்கும் வழக்கமும் அப்போது இருந்தது. செல்வம் இருக்கும் இடத்தில் அன்னாசி இருக்கும் என்பது அந்தக் கால மக்களின் நம்பிக்கை.