PUBLISHED ON : நவ 06, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1920ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் அலாரம் வசதி கொண்ட கடிகாரங்கள் அனைவர் வீட்டையும் அலங்கரித்தன. இப்பொழுது, ஸ்மார்ட்போனில் விருப்பப்பட்ட பாட்டு அல்லது இசையை அலாரமாக வைத்து, சரியான நேரத்தில் எழுந்து கொள்கிறோம்.
அலாரம் கடிகாரங்களுக்கு முன்பும், ஸ்மார்ட்போன் அலாரம்களுக்கு முன்பும், நாக்கர்- அப்பர்ஸ் (Knocker -uppers) என்று அழைக்கப்படும் குழுவினர் இருந்தனர்.
காலை நேரத்தில், மக்களை எழுப்புவதற்காக, அவர்கள் வீட்டு ஜன்னல்களைத் தட்டுவது தான் இவர்களின் வேலை. இக்குழுவினர் நெதர்லாந்து, பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இப்பணியைச் செய்து வந்தனர்.
வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு, வாடிக்கையாளர் வீட்டு ஜன்னல், கதவுகளைத் தட்ட, நீண்ட குச்சி, மென்மையான சுத்தியல்கள் ஆகிய கருவிகளைப் பயன்படுத்தினர்!