PUBLISHED ON : ஜூன் 25, 2018

அ நிறம் | அளவு
நடைமேடைப் பள்ளி!
ரயில்வே நடைமேடைகளில் பள்ளி நடத்த முடியுமா? முடியும். அதை நிரூபித்தவர் இந்திரஜித் குரானா என்ற பெண்மணி. ரயில்வே ஸ்டேஷன்களில் அலைந்து திரியும் ஏழை எளிய பிள்ளைகள் உண்டு. ரயில்களில் சுத்தம் செய்து யாசகம் கேட்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களுக்கு முறையான கல்வி போதிக்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியை எடுத்தவர் இந்திரஜித்.
இவர் இதற்காகத் தேர்வு செய்தது ரயில்வே நடைமேடைகளையே. அங்கேயே அவர்களோடு பேசி, பாடங்கள் சொல்லிக் கொடுத்து, எழுத்தறிவை ஏற்படுத்தி, பெரும் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருந்துள்ளார்.
1985இல் புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று பல்வேறு மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. இவர் தொடங்கிய ருசிகா சமூகசேவை நிறுவனம் இவரது கனவை இன்றும் நிறைவேற்றிக்கொண்டு உள்ளது!
