தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வடையில கடை போடறாங்க!

வடையில கடை போடறாங்க!

வடையில கடை போடறாங்க!


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சோமு ராகமாக உட்கார்ந்திருந்தான்.'

வெயிட்… வெயிட்… அதெப்படி ராகமாக உட்கார முடியும்? என்று குழம்புகிறீர்கள் இல்லையா? அந்த வாக்கியம் தப்பு. 'ராமு சோகமாக உட்கார்ந்திருந்தான்' என்பதைத்தான் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டேன்.

இதில் என்ன தப்பு, என்று கவனித்தீர்களா? ஒரு வாக்கியத்தில் இருக்கும் இரண்டு சொற்களின் முதல் எழுத்துகள் இடம் மாறி இருக்கின்றன. அதனால், அர்த்தமே மாறிவிட்டது. வேறொரு அர்த்தம் கிடைக்கிறது என்பது கூடுதல்.

ஆங்கிலத்தில், இப்படி ஓர் அல்லது ஓரிரு எழுத்துகளின் ஒலி இடம் மாறி வந்து வேறொரு பொருள் தரும் விஷயத்தை, Spoonerism என்று குறிப்பிடுவார்கள். ஆங்கில உதாரணம் வேண்டுமானால், 'Fighting a liar' என்பது 'Lighting a fire' என்று மாறுவதைச் சொல்லலாம். அர்த்தத்தைப் பாருங்கள்… 'ஒரு பொய்யனோடு சண்டை இடுவது' என்கிற வாக்கியம் 'ஒரு தீயைக் கொளுத்துவது' என்பதாக மாறிவிட்டது!

மேலே சொன்னது போல் அன்றி, இல்லாமல், அர்த்தமே இல்லாமல்கூட நம்மைச் சுற்றி யாராவது ஸ்பூனரிஸம் பேசுவதைக் கவனித்திருப்பீர்கள். 'அந்த ஸீவி டிட்சைப் போடு', 'தைக்கிளை சள்ளேம்ப்பா', 'வெனக்கு ஏணாம்…' இப்படி. அதாவது, 'அந்த டீவி ஸ்விட்சைப் போடு', 'சைக்கிளை தள்ளேம்ப்பா', 'எனக்கு வேணாம்…' இப்படி, குளறுபடியை நீக்கி நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம்.

இந்த காமெடியான குளறுபடிக்கு ஸ்பூனரிஸம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் உண்டு. W.A. Spooner என்பவர் இங்கிலாந்தில் பிரபலமான பேராசிரியர். அவர் இந்த மாதிரி வார்த்தைக் குளறுபடிகளை அடிக்கடி செய்வாராம். 'You missed my history lecture' என்பதை, 'You hissed my mystery lecture' என்பாராம். அந்த ஸ்பூனர் பெயரையே இதற்கு வைத்துவிட்டார்கள்!

இப்போது சில ஸ்பூனரிஸ வாக்கியங்களைத் தருகிறேன். அவற்றிற்கு சரியான வாக்கியம் என்னவாக இருக்கும்? யோசியுங்கள்…

'Go and shake a tower.'

'Tease my ears.'

'You have very made banners.'

இவ்வளவு தெரிந்துகொண்ட உங்களுக்கு இந்தக் கட்டுரையின் தலைப்பை விளக்க வேண்டாம்தானே…?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us