sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

யூடியூப் ஸ்டார்ஸ்!

/

யூடியூப் ஸ்டார்ஸ்!

யூடியூப் ஸ்டார்ஸ்!

யூடியூப் ஸ்டார்ஸ்!


PUBLISHED ON : ஏப் 15, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவுசெய்து இணையத்தில் பகிரலாம். அவை, சுவாரசியமாக இருந்தால், நீங்களும் பிரபலமாக வாய்ப்புண்டு. அப்படி யூடியூபில் வீடியோக்களை பதிவுசெய்து சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம்.

ராபி நோவக்

அமெரிக்காவைச் சேர்ந்த ராபி நோவக், பாடகர், கவிஞர், சுயமுன்னேற்றப் பேச்சாளர் என அனைத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். 2012ஆம் ஆண்டு தொடங்கி சோல்பான்கேக் வலைத்தளத்தில் கிட் பிரசிடெண்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 'அன்பு உலகை மாற்றும். உலகை அன்பால் நிறைப்போம்” எனும் குழந்தை அதிபர், மரபணு நோயான ஆஸ்டியோ ஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா (osteogenesis imperfecta) வினால் பாதிக்கப்பட்டவர். இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

https://www.youtube.com/playlist?list=PLzvRx_johoA-YabI6FWcU-jL6nKA1Um-t&feature=plcp

ஈவன் (Evan)

ஈவன் தன்னுடைய யூடியூப் சேனல் (Evantube) மூலம், உலகம் முழுக்க செலிபிரிட்டி நாயகனாகி இருக்கிறார். எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது, ஏன்? எதற்கு? எப்படி? வகையறா வீடியோக்களை பதிவிட்டு 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஈவனின் தந்தை திரைப்படக்கலைஞர் என்பதால், வீடியோக்களுக்கு அவரே இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். வீடியோக்களுக்கு ஈவன் மற்றும் அவரது தங்கை ஜில்லியன் காம்பியர்களாக மாறி அசத்துகின்றனர். இவர்கள் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர்.

https://www.youtube.com/channel/UCHa-hWHrTt4hqh-WiHry3Lw

மியா (MYA)

பாட்டிலில் முட்டை, ரூபி க்யூப் சோதனை, பாட்டில் தெர்மாமீட்டர் என சிறிய ஆச்சரியமூட்டும் அறிவியல் சோதனைகளை மியா (FullTimeKid) செய்து காட்டுகிறார். இவரது நிகழ்ச்சி பிபிஎஸ் (PBS) டிவி சேனலிலும் ஒளிபரப்பாகி உள்ளது. 78 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை தனது குறும்பான, அறிவுப்பூர்வ சோதனைகளுக்குப் பரிசாகப் பெற்றுள்ளார் மியா.

https://www.youtube.com/channel/UC0Grg2zrx1qlJtipR8_7GiQ






      Dinamalar
      Follow us