உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 06, 2018

அ நிறம் | அளவு
ஜிம்பாப்வேயில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிபர் எமெர்சன் நங்காகுவாவின் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே 1980ஆம் ஆண்டு குடியரசானது. அதன் முதல் பிரதமரான ராபர்ட் முகாபே, தொடர்ந்து 37 ஆண்டுகள் அப்பதவியை தக்கவைத்துக் கொண்டார். 2017இல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, முகாபேயை வீட்டுக்காவலில் வைத்தது. ஜனு பி.எப். கட்சியில் அடுத்த நிலையில் இருந்த எமெர்சன் நங்காகுவா, 2017 நவம்பரில் அதிபராகப் பொறுப்பேற்றார். கடந்த ஜூலை 30ஆம் தேதி அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சியான ஜானு பி.எப். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எமெர்சன் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
