PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

டி.வி.வரதராஜன்
உலகம் அறிந்த டி,வி.,நிகழ்ச்சி அறிவிப்பாளர்
கடந்த 50 ஆண்டுகாலமாகமாக நாடகமே தனது உலகம் என வாழ்பவர்.
இவரது யுனைடெட் விஷூவல்ஸ் குழுவிற்கு இது 30 ஆம் ஆண்டு, குழுவின் சார்பில் மேடையேறிய இவரது பல நாடகங்கள் ரசிகர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது, அதிலும் ஸ்ரீ தியாகராஜர் நாடகமும்,எல்.கே.ஜி.,ஆசை நாடகமும் பெரும் வரவேற்பை பெற்ற நாடகங்களாகும்.
1976 ஆம் ஆண்டு என் கேள்விக்கு என்ன பதில் என்ற நாடகத்தின் மூலம் மேடையேறிய டி.வி.வரதராஜனுக்கு, அவரது மேடை அனுபவத்திற்கு இது பொன்விழா ஆண்டாகும்.பொன்விழா பரிசாக இப்போது அமெரிக்கா பயணம் அமைந்துள்ளது.
இதற்காக டிவி வரதராஜன், லஷ்மி, ஷங்கர் குமார், கிரீஷ் ஆகிய நால்வர் குழு ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்கிறது.அங்கு நியூஜெர்சி,சிகாகோ,டெக்சாஸ்,கலிபோர்னியா உள்ளீட்ட முக்கிய நகரங்களில் இரண்டு மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து 12 முறை நாடகத்தை மேடையேற்ற உள்ளனர்.முதல் காட்சி வருகின்ற 26 ஆம் தேதி நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நாடக ஆர்வலர்களாக உள்ள தமிழர்கள் குழு அமைத்து பல்வேறு நாடகங்களை நடத்திவருகின்றனர், அவர்களது நாடக ஆர்வமும் திறமையும் பிரமிக்கவைப்பதாகும்.அந்த குழுவினரில் சிலர் நாடகத்தின் இதர கதாபாத்திரங்களாக நடிப்பர்.
இங்கு எழுதப்பட்ட நாடகங்களுக்கு அங்குள்ளவர்கள் எப்படி நடிப்பர் இது எப்படி சாத்தியம் என்று இன்றும் கூட சிலர் கேட்பதுண்டு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இதெல்லாம் வெகு சாதாரணமாகிவிட்டது இன்றும் சொல்லப்போனால் பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஸ்ரீ தியாகராஜர் நாடகம் நடத்தியபோது ராமர்,சீதை,லட்சுமணன்,அனுமன் என்று ராமர் குடும்பம் முழுக்க அமெரிக்க கலைஞர்களே இடம் பெற்றனர்,அப்படியொரு நடிப்பு கொஞ்சமும் அமெரிக்க ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் வசனம் பேசி நடித்து பாராட்டுப் பெற்றனர்.
இந்த அமெரிக்க கலாச்சார பரிவர்த்தனையை சிகாககா நகரில் 'திரிவேணி குழு' நடத்திவரும் ரங்கநாதனும்,ஹீஸ்டனில் 'மீனாட்சி தியேட்டர்ஸ்' நடத்திவரும் கணேஷ் ரகுவும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வகையில் நாடகத்தை நடத்திவிட்டு ஜூன் 25 ஆம் தேதி தாயகம் திரும்புகின்றனர்.
-எல்.முருகராஜ்