மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டர் இந்தியாவிலேயே மிகப்பெரியது. டிவிஎஸ் ஸ்டுடியோவால் வடிவமைக்கப்பட்ட இது, சர்வதேச பாணியைக் கொண்டுள்ளது, இருப்பினும் உறுதியான இந்திய கலாச்சார மற்றும் ஆன்மீக முத்திரையைக் கொண்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவருமான நிதா அம்பானியால் கற்பனை செய்யப்பட்ட இந்த மையத்தின் முன்பகுதியில் இந்த நீருற்று அமைந்துள்ளது.தினமும் இரவு 7:30க்கு காட்சி ஆரம்பித்து 8:10க்கு நிறைவு பெறுகிறது,ஹிந்தி திரைப்படப் பாடல்கள் தேசபக்த பாடல்களுக்கு ஏற்ப நீருற்து பல வண்ணங்களில் எழுந்து எழுந்து அடங்குவது போல டிசைன் செய்துள்ளர்.இந்த வளாகத்தில் பாப்கார்ன்,டீ,காபி,ஐஸ்கிரீம் போன்றவைகளும் கிடைக்கும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்.நிறைய இடங்களில் நீருற்று அமைந்துள்ளது இந்த நீருற்றில் உள்ள விசேஷம் அவ்வப்போது தீயும் உமிழ்வதாகும்.நெருப்பும் நீரும் சேர்ந்தாடும் நடனம் பெரியவர்களையும் குழந்தைகள் போல குதுாகலிக்கச் செய்கிறது.45 அடி உயரத்திற்கு நீர் உயர்கிறது அப்போது எழும் சாரல் பார்வையாளர்களை குதுாகலிக்கச் செய்கிறது.இந்த நீருற்று தற்போது மும்பையின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.இதனைக் காண கட்டணம் எதுவும் கிடையாது இலவச அனுமதிதான்,கர்ப்பினி பெண்கள்,முதியோர்,உடல் ஊனமுற்றோர் உட்கார்ந்து பார்க்க நாற்காலி அமைத்துள்ளனர் மற்றவர்கள யாவரும் நின்றுகொண்டுதான் காணவேண்டும்.