PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM


பெஞ்ஜால் புயல் போல எந்தப் புயலும் கரையைக் கடக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது இல்லை.
கடந்த 26 ஆம் தேதி கடலில் மையம் கொண்ட இந்தப் புயல் பல்வேறு 'யுடர்ன்' போட்டு கடைசியாக நேற்று கரை ஏறியது.



இதற்கும் முன்பும் இந்தப் பகுதிகளுக்கு புயல் அபாயத்தின் போது போயிருந்தாலும் இந்த முறை கடற்கரையில் நிற்க முடியாத அளவிற்கு காற்று கடுமையாக வீசியது.
படகுகளை டிராக்டர் மூலம் பத்திரப்படுத்துவது கரையோரத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச் செல்வது கடற்கரை அருகே மக்களை வரவிடாமல் தடுத்து நிறுத்துவது என்பது போன்ற பணிகளை போலீசார் சரியாக செய்திருந்தனர்.
இந்த நிலையில் மாலையில் மழை மெள்ள மெள்ள நின்றதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்,சுரங்கப்பாதைகளில் சூழ்ந்த மழை நீர் நாளைக்குள் வடிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
ரொம்பவே மிரட்டிய பெஞ்ஜால் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாக கரையை கடந்து சென்றதில் பலரும் நிம்மதி அடைந்தனர்.
-எல்.முருகராஜ்.

