PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM


இதன் செயலாளராக இருப்பவர் சோவன் குமார்.கலைஞர்களுக்கு சிறப்பான முறையில் ஆதரவு தெரிவிப்பவர்.
இவரது ஒவிய கருப்பொருட்கள் யாவும் லாரி டிரக்கில் பயணம் செய்வதாக வித்தியாசமாக அமைத்துள்ளார்.
ஒரு டிரக் நிறைய காட்டில் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் குவியல்கள் உள்ளன,பின்னனியின் காடு வெறிச்சோடிக்கிடக்கிறது,இயற்கையை வேட்டையாடிவிட்டு இந்த உலகம் எதைக் கொண்டாடப்படுகிறது, எப்படி வாழப்போகிறது என்ற வேதனை இந்த ஒவியத்தில் தெரிகிறது.
இன்னோரு டிரக்கில் 'டிஜிட்டல் வேஸ்ட்' என்று சொல்லக்கூடிய மின்னனு குப்பைகள் குவியலாக எடுத்துச் செல்லப்படுகிறது,உண்மையிலேயே இந்த உலகம் இன்றைய தேதிக்கு பயப்படுவது இந்த டிஜிட்டல் வேஸ்ட்டை நினைத்துதான்,'கேட்ஜட்ஸ்' என்ற பெயரில் ஒவ்வாரு நாளும் ஆயிரக்கணக்கான மின்னனு சாதனங்கள் அறிமுகமாகின்றன, இதை எல்லாம் எப்படி அழிப்பது என்பதுதான் தெரியவில்லை.


-எல்.முருகராஜ்

