தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/புட்டபர்த்தியில் கோலாகலமாக நிறைவுற்ற பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா!

புட்டபர்த்தியில் கோலாகலமாக நிறைவுற்ற பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா!

புட்டபர்த்தியில் கோலாகலமாக நிறைவுற்ற பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா!


PUBLISHED ON : நவ 24, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2026 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

: 'அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்' என்ற தாரக மந்திரத்தால் கோடிக்கணக்கான இதயங்களில் நீங்கா இடம்பிடித்த கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரம்மாண்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், நவம்பர் 23-ம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நிறைவுக்கட்டத்தை எட்டின. இப்புண்ணிய நன்னாளில், பகவானின் திருவருளைப் பெறப் பிரம்மாண்டமான ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திரண்டனர்.Image 1650193காலை நிகழ்ச்சியின் சிகரமாக, பகவானின் கம்பீரமான தங்கத் தேர் பவனி மைதானத்திற்குள் எழுந்தருளியது. கூடியிருந்த பக்தர்களின் விண்ணதிரும் பக்தி முழக்கங்களுக்கும், ஆனந்தக் கண்ணீருக்கும் மத்தியில் வலம் வந்த தங்கத் தேர், அனைவருக்கும் தெய்வீக ஆசிகளை வாரி வழங்கியது.Image 1650194விழாவின் முக்கிய அம்சமாக, இந்திய ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்களின் பன்முக சேவை நடவடிக்கைகளைப் பறைசாற்றும் கண்கவர் ஊர்வலம் நடைபெற்றது. நாடு முழுவதும் புனிதப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஐந்து 'ஸ்ரீ சத்ய சாய் பிரேம பிரவாஹினி' ரதங்கள் அணிவகுத்து வந்தன.Image 1650195அதனைத் தொடர்ந்து, சாய் சேவா நிறுவனங்களின் பல்வேறு மனிதாபிமானத் திட்டங்கள் மற்றும் சேவைப் பிரிவுகளைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வண்ணமயமான, பிரம்மாண்ட அலங்கார ஊர்திகள் வலம் வந்தன. இடையிடையே பல்வேறு மாநில சாய் சேவா பிரிவினரின் கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பகவானின் 'அன்பும் சேவையும்' என்ற உன்னதத் தத்துவம் செயல்வடிவம் பெற்றிருப்பதை இந்தப் பிரம்மாண்ட அணிவகுப்பு உலகிற்குப் பறைசாற்றியது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கேரள மாநில முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன் பக்தர்கள் மத்தியில் உரையாற்றும்போது, 'புட்டபர்த்திக்கு நான் முதன்முறையாக வந்திருப்பதை பகவானின் தெய்வீக அழைப்பாகவே கருதுகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சாய் சேவா நிறுவனங்களின் பிரம்மாண்ட சேவைப் பணிகளைக் கண்டு வியந்த அவர், காலை நிகழ்ச்சிகளில் இருந்து தான் பல மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், இவற்றில் சில சேவைத் திட்டங்கள் தனது மாநில அரசுத் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் உத்வேகமாகவும் அமையும் என்றும் புகழாரம் சூட்டினார்.

முன்னதாக, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் திரு. எஸ்.எஸ். நாகானந்த் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி உரையாற்றினார்.

ஒன்பது ஜோதி தரிசனமும், விண்ணை முட்டிய வானவேடிக்கையும்

விழாவின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக, அகில உலக அமைதி மற்றும் ஆன்மீக ஒளியைப் பரப்பும் விதமாகப் புனிதமான ஒன்பது ஜோதிகள் ஏற்றப்பட்டன. இருளை நீக்கி ஞான ஒளியைப் பரப்பும் பகவானின் அருளை உணர்த்தும் விதமாகச் சுடர்விட்ட இந்த ஒன்பது ஜோதிகளைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

இரவு நேரத்தில், கொண்டாட்டங்களின் உச்சமாக வானை வண்ணமயமாக்கும் பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விண்ணில் வெடித்துச் சிதறிய வண்ண ஒளிக்கீற்றுகள் புட்டபர்த்தி நகரையே சொர்க்கலோகமாக மாற்றியது. 'சாய்ராம்' என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில், பகவானுக்கு மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இனிதே நிறைவுற்றன.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us