PUBLISHED ON : நவ 14, 2026 03:28 PM

தென்னிந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்க்கும் முக்கிய மையமான சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள தட்சிணசித்ரா, தனது 30 ஆண்டுகாலச் சேவைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'தி ஜெர்னி ஆஃப் அன் ஐடியா' என்ற சிறப்பு நூலை வெளியிட்டுள்ளது.



இந்த நூலை உருவாக்க உழைத்த சரத் நம்பியார் தலைமையிலான நூலகர் இந்து, முதன்மை வடிவமைப்பாளர் பழனியப்பன், பக்க வடிவமைப்பு கலைஞர் பிரேம் குமார் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பாரத் ராமமிர்தம், ரேகா ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
திரிபுரா ஏஸ் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீபிரியா வெங்கட்ராமன் ஆகியோரின் தாராள ஆதரவினால் இந்த நூலை வெளியிடுவது சாத்தியமாகியுள்ளது.
வரலாற்றை நம் கண்முன்னே நிறுத்தும் ஒரு வாழும் அருங்காட்சியகமாக தட்சிணசித்ரா திகழ்கிறது. 'தி ஜெர்னி ஆஃப் அன் ஐடியா' நூல் கடந்த கால வரலாற்றை புரிந்து கொள்ளவும், அதைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு செல்லவும் ஒரு முக்கிய ஆவணமாக விளங்குகிறது.
இந்நூல் தட்சிணசித்ரா அருங்காட்சியகத்தின் விற்பனை நிலையத்தில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது.புத்தக வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு பழமையைப் போற்றும் கண்காட்சி ஒன்றும் நடந்துவருகிறது.
படம்,தகவல்:ரேகா,தட்சிண சித்ரா
