PUBLISHED ON : நவ 12, 2026 09:28 PM

ஜம்மு-காஷ்மீரின் குளிர்ச்சியான பள்ளத்தாக்குகளில் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வரும் பெருமைமிக்க பாரம்பரியங்களில் ஒன்று தாமிர பாத்திரங்கள் செய்யும் கைவினைக்கலை.





ஒரு திறமையான கைவினைஞரால் ஒருநாளில் கடின உழைப்புக்குப் பிறகு சுமார் 20 பொருட்களை மட்டுமே கைவேலையாக உருவாக்க முடியும்.நூற்றாண்டுகளாக காஷ்மீரின் பொருளாதாரத்துாண்ணாக விளங்கும் இக்கலை, இன்றைய நவீன காலத்தில் பல ஆபத்துகளைச் சந்தித்து வருகிறது:நவீன தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மூலம் ஒரே நாளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் மலிவான விலையில் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் கைவினைஞர்களின் உழைப்புக்கான உரிய விலை கிடைப்பதில்லை.போலிப் பொருட்கள் மற்றும் கலப்படங்கள்: சந்தையில் விற்கப்படும் மலிவான அலுமினியம் அல்லது நிக்கல் கலந்த கலப்புப் பொருட்கள், உண்மையான தாமிரக் கலையின் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இது வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, பாரம்பரியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது.
சந்தைப் போட்டி காரணமாக கைவினைஞர்கள் போதிய வருமானமின்றி அவதிப்படுகின்றனர். இவர்களின் பாரம்பரியக் கலையைக் காப்பாற்றவும், சிரமப்படும் கைவினைஞர்களுக்குக் கடன் தள்ளுபடி வழங்கவும், இயந்திரத் தயாரிப்புகளைக் கட்டுப்படுத்தவும் கடுமையான சட்ட அமலாக்கங்களைக் கோரி அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாமிரக் கலை என்பது வெறும் காஷ்மீரின் வியாபாரம் மட்டுமல்ல; அது அவர்களின் ஆன்மாவோடு கலந்த பாரம்பரிய அடையாளம். நவீன இயந்திரங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கும் இந்த கைவினைக் கலைஞர்களின் உழைப்பைப் போற்றி, இயந்திரப் பொருட்களுக்கு மாற்றாகக் கைவினைப் பொருட்களை வாங்குவதுதான் இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வழியாகும்.
---எல்.முருகராஜ்
