PUBLISHED ON : மார் 08, 2024 12:00 AM
![]() |
இங்கு பயிற்சி பெறுபவர்கள் பயிற்சியின் நிறைவின் போது தஙகளது சாகச நிகழ்ச்சியை நிகழ்த்திக்காட்டுவர்.
![]() |
இந்த வருடத்திற்கான இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஜிம்னாஸ்டிக்,கேரளா, களரி விளையாட்டு,மோட்டார் பைக்கில் சாகசம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
![]() |
மோட்டார் சைக்கிள் சாகசம் என்பது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தது.நான்கு திசைகளில் இருந்து மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்த வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளாமல் குறுக்கே புகுந்து வெளியேறியதைப் பார்த்து பலரும் கைதட்டி பாராட்டினர்.
களரி விளையாட்டின் போது நிஜமான கத்தி கேடயத்துடன் சண்டையிட்டுக் கொண்டனர், பாரம்பரிய மிக்க அந்தக் கலையை பிரமிக்கதக்கவகையில் நடத்திக் காட்டினர்.
ஜிம்னாஸ்டிக் வீரர்கள் எரியும் தீ வளையத்திற்குள் பாய்ந்து, பாய்ந்து வெளியேறியதைப் பார்த்த பலரும் கைதட்டி பாராட்டினர்.
![]() |
முத்தாய்ப்பாக ராணவ வீரர்கள் களத்தில் எப்படி சண்டையிடுவர் என்பதை செய்து காட்டினர் ஆக்ரோசம் பொங்க நம் வீரர்கள் எதிரிகளைப் போல வடிவமைக்கப்பட்டிருந்த பொம்மைகளை வெட்டி வீழ்த்தியதை பார்த்து மக்கள் ஊராவரித்தனர்.
வீரர்களுக்கு லெப்டினென்ட் ஜெனரல் சஞ்ஜீவ் செளகான் பரிசு வழங்கி கவுரவித்தார்.
-எல்.முருகராஜ்.





