தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்...

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்...

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்...


PUBLISHED ON : அக் 01, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2018 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில் எவ்வளவோ நல்ல நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவைகளை கவனிப்பதில்லை அல்லது அதற்கான முக்கியத்துவம் கொடுப்பது இல்லை

அந்த நல்ல நிகழ்வுகளில் ஒன்றுதான் சென்னையில் உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பும் கீதாபவன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய உடல் ஊனமுற்றவர்களுக்கான சுயம்வரம்.

திருமணமாகாத உடல் ஊனமுற்ற ஆண் பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதுடன் அவர்களுக்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இலவசமாக சீர்வரிசை வழங்குவது உள்ளீட்ட பல்வேறு நன்மைகளை செய்யும் இந்த அமைப்பின் ஒன்பாதாவது வருட சுயம்வரம் சென்னை கோபாலபுரம் கீதாபவனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடுபவர்,காது கேளாதவர்,வாய் பேச இயலாதவர்,சிறிது மனநிலை குறைந்தவர் என்று சின்ன சின்ன உடல் ஊனமுற்றவர்கள் தங்களுக்கான இணையைத் தேடி மேடையேறினர்.

மேடையேறிய பெண்கள் பலர் பேசும்போது நான் நன்றாக சம்பாதிக்கிறேன் சொந்த வீடு வைத்திருக்கிறேன் என்னை விரும்புபவர் என்னைப்புரிந்து கொண்டவராய் கடைசிவரை கைவிட்டுவிடாதவராய் பூரணமான அன்பு செலுத்துபவராக இருந்தால் போதும் வேறு எந்தத்தகுதியும் வேண்டாம் அவரும் என்னைப் போல ஊனமுற்றவராய் இருக்கலாம் என்றெல்லாம் பெண்கள் மனம் திறந்து பேசி அன்பான மணமகனைத் தேடியது மனதை உருக்குவதாக இருந்தது.

அந்த பெண்களில் சிலருக்குதான் அவர்கள் மனதிற்கு ஏற்ற மணமகன்கள் கிடைத்தனர் ஆனால் பலருக்கு கிடைக்கவில்லை மணமகன் கிடைக்கப்பெற்றவர்களுக்கு அமைப்பினர் மலர்துாவி வாழ்த்தினர்.மற்றவர்களுக்கு மலர்துாவி வாழ்த்த காத்திருக்கின்றனர்.

உண்மையான அன்புக்கும் பாசத்திர்க்கும் ஏங்கும் இந்த பெண்களின் குறைகளை பார்க்காமல் மனதில் உள்ள நிறைகளைப் பார்த்து அவர்களை திருமணம் செய்பவர்கள் அந்த பெண்களின் உள்ளத்தில் மட்டுமல்ல சமூகத்தின் உள்ளத்திலும் உயர்ந்துவிடுவார்கள் உள்ளபடியே கொடுத்து வைத்தவர்களுமாவார்கள் ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உடல் ஊனமுற்றோர் அமைப்பின் தலைவர் சிம்மசந்திரனை தொடர்பு கொள்ளவும் எண்:9962711174.

-எல்.முருகராஜ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us